தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐ.ஐ.எம்.சி தேன்கனல், ஒடியா இதழியலில் முதுநிலை டிப்ளமோ சேர்க்கையை அறிவித்துள்ளது

Posted On: 05 MAR 2025 3:57PM by PIB Chennai

இந்தியாவின் முதன்மையான ஊடக பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான இந்திய மக்கள் தொடர்பியல் நிறுவனம் (ஐ.ஐ.எம்.சி) தேன்கனல், 2025-26 கல்வியாண்டிற்கான ஒடியா இதழியலில் முதுகலை டிப்ளமோ (பி.ஜி.டி.ஓ.ஜே) சேர்க்கை செயல்முறையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த ஒரு வருட முழுநேர தொழில்முறை பாடத்திட்டம் ஒடியா மொழியில் சிறப்பு கவனம் செலுத்தி பத்திரிகை, ஊடக எழுத்து, அறிக்கையிடல், எடிட்டிங், டிஜிட்டல் தகவல் தொடர்பு மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவற்றில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐ.ஐ.எம்.சி தேன்கனலின் பிராந்திய இயக்குநர் பேராசிரியர் ஆனந்த் பிரதான், சேர்க்கை செயல்முறை 2025 மார்ச் 3 முதல் தொடங்குவதாகக் கூறினார். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2025 ஏப்ரல் 30 ஆகும். நுழைவுத் தேர்வு 2025 மே 18 அன்று புவனேஸ்வர், தேன்கனல், பெர்ஹாம்பூர், சம்பல்பூர் மற்றும் பாலசோர் உள்ளிட்ட ஒடிசாவின் ஐந்து நகரங்களில் நடைபெறும். நுழைவுத் தேர்வில் ஒடியாவில் மாணவர்களின் மொழித் தேர்ச்சி, எழுதும் திறன், பொது அறிவு மற்றும் இதழியல் திறன் ஆகியவை மதிப்பிடப்படும்.

இந்த படிப்பில் மத்திய அரசின் விதிமுறைகளின்படி எஸ்.சி/எஸ்.டி/ஓ.பி.சி/பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள்/மாற்றுத்திறனாளி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு உட்பட 30 இடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் தங்கள் இறுதி மதிப்பெண் சான்றிதழ்களை 2025 செப்டம்பர் 30 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது தளர்வுகள் உடன் பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 25 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108461 

----

(Release ID: 2108461)

RB/DL  


(Release ID: 2108680) Visitor Counter : 13


Read this release in: English , Urdu , Hindi , Odia