இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கேலோ இந்தியா பாரா விளையாட்டு 2025-ல் பதக்கம் வென்ற பாராலிம்பிக் வீரர்கள் பங்கேற்கின்றனர் ; அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா
Posted On:
05 MAR 2025 6:28PM by PIB Chennai
புதுதில்லியில் வரும் 20 முதல் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ள கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளில் பல சர்வதேச பாரா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் பங்கேற்பார்கள் என மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் மார்ச் 21 முதல் 26 வரை பாரா தடகளம், பாரா வில்வித்தை, பாரா பளுதூக்குதல் பிரிவுகளும், ஐஜி விளையாட்டு அரங்க வளாகத்தில் மார்ச் 20 முதல் 27 வரை பாரா பேட்மிண்டன் மற்றும் பாரா டேபிள் டென்னிஸ் போட்டிகளும் நடைபெறும். டாக்டர் கர்னி சிங் துப்பாக்கி சுடும் தளத்தில் மார்ச் 21 முதல் 25 வரை பாரா துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற உள்ளன.
கடந்த ஆண்டு பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் மற்றும் கடந்த 2022-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற பல போட்டியாளர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.
நமது பாரா விளையாட்டு வீரர்களின் தனித்துவமான வளர்ச்சி மற்றும் மிகப்பெரிய உத்வேகத்தை இந்தப் போட்டி வழங்கும் என்றும், இதில் பல சாதனை நிகழ்வுகளை நாம் காண்போம் என தான் நம்புவதாகவும் அமைச்சர் மாண்டவியா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108559
***
TS/GK/RJ/DL
(Release ID: 2108613)
Visitor Counter : 18