தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
உலக மொபைல் மாநாடு, 2025 - ல் இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள உருமாற்ற முன்னேற்றங்கள் குறித்து மத்திய அமைச்சர் திரு.ஜோதிராதித்யா சிந்தியா எடுத்துரைத்தார்
Posted On:
05 MAR 2025 10:53AM by PIB Chennai
ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் நடைபெறும் உலக மொபைல் மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா அங்கு தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். இம்மாநாட்டின் முக்கிய அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய அவர், தொலைத்தொடர்பு மற்றும் மொபைல் துறையைச் சேர்ந்த உலகின் பெரிய தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டங்களிலும் பங்கேற்றார்.
உலக மொபைல் மாநாட்டில் இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள உருமாற்ற முன்னேற்றங்களான அதிவிரைவான 5ஜி மொபைல் சேவைகள், தரவு பயன்பாடுகளுக்கு மிகக் குறைந்த கட்டணங்கள், உள்நாட்டு 4ஜி /5ஜி சேவைகள், வலுவான சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன. உலக மொபைல் மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் நாட்டின் தொலைத் தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உலக அளவில் முன்னணி நாடாக இந்தியாவை நிலை நிறுத்தியுள்ளது.
"புதுமை, உள்ளடக்கம், நிலைத்தன்மை, நம்பிக்கை ஆகியவை தொழில்நுட்ப நிர்வாகம் குறித்த இந்தியாவின் வழிகாட்டுதல் கொள்கைகளுக்கான மையத்தை உருவாக்குகின்றன” என்று கூறிய அவர், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சேவை செய்வதில் ஆதார், பாரத்நெட் ஆகியவற்றின் பங்களிப்பை எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108275
-----
TS/SV/KPG/KR
(Release ID: 2108388)
Visitor Counter : 15