பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
பெண்களுக்கு உகந்த மாதிரி கிராமப் பஞ்சாயத்துகள் முன்முயற்சி புதுதில்லியில் 2025 மார்ச் 5 அன்று தொடங்கப்பட உள்ளது
Posted On:
04 MAR 2025 3:44PM by PIB Chennai
பெண்களுக்கு உகந்த மாதிரி கிராமப் பஞ்சாயத்துகள் முன்முயற்சியை மத்திய பஞ்சாயத்து அமைச்சகம் புதுதில்லி விஞ்ஞான் பவனில் நாளை (2025 மார்ச் 5) தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சி அமைச்சகத்தின் சர்வதேச மகளிர் தினம் 2025 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும், மேலும் கிராமப்புற நிர்வாகத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தவும், நாடு முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு, உள்ளடக்கம் மற்றும் பாலின சமத்துவத்தை உறுதி செய்யவும் அமைச்சகம் தயாராக உள்ளது. மத்திய பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். சுமார் 350 பங்கேற்பாளர்கள், முதன்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளிலிருந்து அதிகாரிகள், மாநாட்டில் நேரடியாகவோ அல்லது மெய்நிகர் மூலமாகவோ கலந்து கொள்வார்கள். பங்கேற்பாளர்களில் நாடு முழுவதும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு கிராம பஞ்சாயத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெறுவார்கள்.
இந்த முயற்சியின் முதன்மை நோக்கம், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மாதிரி மகளிர் நட்பு கிராமப் பஞ்சாயத்தை நிறுவுவதாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108066
----
TS/IR/KPG/RR
(Release ID: 2108080)
Visitor Counter : 17