தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வேவ்ஸ் சந்தை: ஊடகம் மற்றும் பொழுதுபோக்கிற்கு முழுமையான வணிக ஒத்துழைப்பு மையம்
प्रविष्टि तिथि:
03 MAR 2025 4:56PM by PIB Chennai
திரைப்படம், தொலைக்காட்சி, அனிமேஷன், விளையாட்டு, விளம்பரம், இசை, ஒலி வடிவமைப்பு, வானொலி உள்ளிட்ட ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தளங்களோடு தொடர்புடைய பலரையும் ஒருங்கிணைக்கும் இ-சந்தையாக விளங்குவது வேவ்ஸ் பஜார் ஆகும்.
இந்தத் துறைசார்ந்த தொழில்முறையாளர்கள் எளிதாக தங்களின் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், வாங்குவோர்- விற்போர் இடையே ஒரு பாலமாக இது விளங்குகிறது.
விரிவான துறை சார்ந்த ஒருங்கிணைப்பு, உலகளாவிய தொடர்பு மற்றும் பார்வையிடல், தடையற்ற வலைப்பின்னல் மற்றும் ஒத்துழைப்பு, வாங்குவோர்- விற்போர் பரிவர்த்தனைகளை முறைப்படுத்துதல், பலவகையான வாய்ப்புகளைப் பட்டியலிடுதல், பிரத்யேகமான தொழில்துறை நிகழ்வுகள் மற்றும் சந்தைகளை எளிதாக அணுகச் செய்தல் போன்றவை வேவ்ஸ் சந்தையின் சிறப்பு அம்சங்களாகும்.
விளம்பர சேவைகளுக்கான உலகளாவிய இ-சந்தை, நேரலை நிகழ்வுகளுக்கு முழுமையான சந்தை, திரைப்படங்களுக்கு உலகளாவிய சந்தை, இணையவழி விளையாட்டுகளை உருவாக்குவோருக்கு சந்தை வாய்ப்புகளை வழங்குதல், வானொலி மற்றும் போட்காஸ்ட் ஆகியவற்றுக்கு உலகளாவிய சந்தையை ஏற்படுத்துதல், படக்கதைகள் மற்றும் மின் புத்தகங்களுக்கும் இணையத் தொடர்களுக்கும் உலகளாவிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்துதல் போன்றவையும் வேவ்ஸ் சந்தையின் செயல்பாடுகளில் அடங்கும்.
வேவ்ஸ் சந்தையில் இணைந்து பயன்பெற wavesbazaar.com என்ற இணையத்தில் பதிவுசெய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2107781
***
TS/SMB/DL
(रिलीज़ आईडी: 2107930)
आगंतुक पटल : 56