தேசிய மனித உரிமைகள் ஆணையம்
மனித உரிமைகள் குறித்த இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நிர்வாக திறன் மேம்பாட்டுத் திட்டம் புதுதில்லியில் தொடங்கியது
Posted On:
03 MAR 2025 4:01PM by PIB Chennai
தேசிய மனித உரிமைகள் ஆணையம்,வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள, உலகின் தென் பகுதி நாடுகளின் தேசிய மனித உரிமை நிறுவனங்களுக்கான ஆறு நாள் மனித உரிமைகள் குறித்த இந்தியத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நிர்வாகத் திறன் மேம்பாட்டுத் திட்டம் இன்று புதுதில்லியில் தொடங்கியது. உலகின் தென் பகுதியின் 14 நாடுகளைச் சேர்ந்த தேசிய மனித உரிமை நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 47 பங்கேற்பாளர்கள் தங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளனர். அவை மடகாஸ்கர், உகாண்டா, சமோவா, திமோர் லெஸ்டே, டிஆர் காங்கோ, டோகோ, மாலி, நைஜீரியா, எகிப்து, தான்சானியா, மொரீஷியஸ், புருண்டி, துர்க்மெனிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளாகும்.
இதில் தொடக்க உரையாற்றிய இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி வி. ராமசுப்பிரமணியன், இந்தியா பல்வேறு சாதிகள், சமூகங்கள், கலை வடிவங்கள் மற்றும் மொழிகளுடன் வளமான, பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார நெறிமுறைகளைக் கொண்ட நாடு என்றும் பல நூற்றாண்டுகளாகப் பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் மரபுகளின் ஒற்றுமையில் அது செழித்து வளர்கிறது என்றும் கூறினார். இருப்பினும், பன்முகத்தன்மையானது பல்வேறு தீர்வுகள் தேவைப்படும் பல்வேறு பிரச்சனைகளுடன் உருவாகிறது என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சுயமான சமூக-கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மரபுகள் உள்ளன. மேலும் அவை மனித உரிமைகள் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்போது பன்முகத்தன்மை சவால்களை எதிர்கொள்ளக்கூடும். மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தைப் பின்பற்றி அவற்றைக் கையாள்வதற்கான தரப்படுத்தப்பட்ட அணுகுமுறைகளை அந்த நாடுகள் கொண்டுள்ளன என்று கூறினார். எனவே, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
***
(Release ID: 2107759)
TS/IR/RR
(Release ID: 2107786)
Visitor Counter : 24