பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பெல்ஜியம் இளவரசி ஆஸ்ட்ரிட் மற்றும் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தார்

Posted On: 03 MAR 2025 2:01PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று (2025 மார்ச் 03)  பெல்ஜியம் இளவரசி ஆஸ்ட்ரிட் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் திரு. தியோ ஃபிராங்கன் ஆகியோரை பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் சந்தித்தார். இந்தோ-பசிபிக் பகுதியில், குறிப்பாக கடல்சார் பகுதியில் பாதுகாப்புப் பணிகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் தளவாட தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

பாதுகாப்புத் துறையில் பெல்ஜியம் நாட்டின் முதலீடுகளை வரவேற்பதாக திரு ராஜ்நாத் சிங் கூறினார். இந்தியாவில் தங்கள் தடத்தை விரிவுபடுத்துவதன் மூலமும் இந்திய விற்பனையாளர்களை அவர்களின் விநியோகச் சங்கிலிகளில் ஒருங்கிணைப்பதன் மூலமும் பெல்ஜிய நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று அவர் பரிந்துரைத்தார். மேலும், அனைத்து வழிகளிலும் பாதுகாப்பு ஒத்துழைப்பு செயல்முறையை ஆராயவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

***

(Release ID: 2107706)
TS/IR/RR


(Release ID: 2107724) Visitor Counter : 21