கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"ஒரு தாயின் மடியே ஆகச் சிறந்த வகுப்பறை": மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால்

Posted On: 03 MAR 2025 7:16AM by PIB Chennai

"ஒரு தாயின் மடியே உலகின் சிறந்த கற்றல் நிறுவனம்" என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் தெரிவித்துள்ளார். திப்ருகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில அசாம் சோனாவால் கச்சாரி மகளிர் சங்கத்தின் மத்திய நிறுவன தினத்தில் உரையாற்றிய அவர், நாட்டைக் கட்டமைப்பதில் மகளிரின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார்.

மகளிருக்கு அதிகாரமளிப்பதில் அரசின் உறுதிப்பாட்டை அமைச்சர் பாராட்டினார். "பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மகளிருக்கு அதிகாரமளிப்பது ஒரு வளமான, தன்னம்பிக்கை கொண்ட சமூகம் மற்றும் நாடு உருவாக வழி வகுத்துள்ளது" என்று கூறினார்.

ரிக்வேதத்தை மேற்கோள் காட்டிய மத்திய அமைச்சர், மகளிர் வரலாற்று ரீதியாக ஒரு முற்போக்கான மற்றும் முழுமையான சமூகத்தை வடிவமைப்பதில் ஒரு அடிப்படை பங்கை வகித்துள்ளனர் என்று குறிப்பிட்டார். "ஒரு தாய் தனது குழந்தைகளை அறிவைப் பெறுமாறு ஊக்குவிக்கிறார், அவர்களை துணிச்சலுடன் வழிநடத்து கிறார். முயற்சி மற்றும் விடாமுயற்சி இல்லாமல், ஒருவரின் முழு திறனையும் உணர முடியாது," என்று அவர் கூறினார்.

தொழில்நுட்ப முன்னேற்றத்தை மனித சமுதாயத்துடன் சமநிலைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை திரு சோனாவால் மேலும் சுட்டிக் காட்டினார், "முன்னேற்றம் அவசியம், ஆனால் மனிதநேயம் இல்லாமல், அது முழுமையடையாது. நம் முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள நாம் மனித மாண்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று திரு சோனாவால் வலியுறுத்தினார்."

***

(Release ID: 2107629)
TS/IR/RR


(Release ID: 2107659) Visitor Counter : 17


Read this release in: Urdu , English , Hindi , Assamese