கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளமான தோலாவிராவுக்கு குடியரசுத்தலைவர் வருகை தந்தார்

Posted On: 01 MAR 2025 7:38PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குஜராத்தில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய  தளமான  தோலாவிராவுக்கு வருகை தந்தார். இந்த தளம் கட்ச் மாவட்டத்தில் உள்ள வறண்ட காதிர் தீவில் அமைந்துள்ளது.

ஹரப்பா நாகரிகத்தின் தளம் தொலைதூர இடத்தில் அமைந்திருந்தாலும் அதன் மரபுரிமையை பாதுகாப்பதற்காக இந்திய தொல்பொருள் ஆய்வகத்தினால் மேற்கொள்ளப்படும் உன்னிப்பான பாதுகாப்பு முயற்சிகளுக்கு குடியரசுத்தலைவர் பாராட்டு தெரிவித்தார்.

குஜராத் ஆளுநர் மற்றும் பிற பிரமுகர்களுடன் வந்திருந்த குடியரசுத்தலைவர், தோலாவிராவின் பிரம்மாண்டமான அமைப்பால் ஈர்க்கப்பட்டார். புகழ்பெற்ற தளத்தை முழுமையாக ஆராய்ந்து தெரிந்து கொள்ள குறைந்தது மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஹரப்பா மக்களின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து அவர் தனது பாராட்டை வெளிப்படுத்தினார், பல அம்சங்களில், அவர்கள் தற்போதைய சகாப்தத்தை விட மேன்மையானவர்களாக இருந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் திரு. ஒய்.எஸ். ராவத் மற்றும் இதர மூத்த அதிகாரிகள், குடியரசுத்தலைவருக்கு வழிகாட்டி, முக்கிய கண்டுபிடிப்புகள் மற்றும் தற்போதைய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் குறித்து விளக்கினர்.

தோலாவிரா, துணைக் கண்டத்தின் மிக முக்கியமான மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும், இது ஹரப்பா மக்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துகிறது. அதிநவீன நீர் பாதுகாப்பு அமைப்பு, நன்கு கட்டமைக்கப்பட்ட நீர்த்தேக்கங்கள், நகர்ப்புற குடியேற்றங்கள் போன்றவற்றுடன் மேம்பட்ட நகர திட்டமிடல் திறன்களை இது வெளிப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2107386 


 ************* 

BR/KV


(Release ID: 2107490) Visitor Counter : 17