பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

என்எக்ஸ்டி  மாநாட்டில் முக்கிய பிரமுகர்களை பிரதமர் சந்தித்து உரையாடினார்

Posted On: 01 MAR 2025 4:07PM by PIB Chennai

 

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லி பாரத மண்டபத்தில் உள்ள என்எக்ஸ்டி  மாநாட்டில் பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்தித்து உரையாடினார். இந்தப் பிரமுகர்கள் பட்டியலில் திரு. கார்லோஸ் மான்டெஸ், பேராசிரியர் ஜொனாதன் ஃப்ளெமிங், டாக்டர் ஆன் லிபர்ட், பேராசிரியர். வெசெலின் போபோவ்ஸ்கி, டாக்டர் பிரையன் கிரீன், திரு. அலெக் ரோஸ், திரு. ஒலெக் ஆர்டெமியேவ்,  திரு. மைக் மாசிமினோ ஆகியோர் அடங்குவர்.

இது தொடர்பான பதிவுகளில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

"திரு கார்லோஸ் மான்டெஸ் உடன் இன்று என்எக்ஸ்டி மாநாட்டில் கலந்துரையாடினேன்.  சமூகப் புதுமைகளை  மேம்படுத்துவதில் அவர் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளார். டிஜிட்டல் தொழில்நுட்பம், நிதிநுட்பம் மற்றும் பலவற்றில் இந்தியாவின் முன்னேற்றங்களை அவர் பாராட்டினார்’’.

“எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டுடன் தொடர்புடைய பேராசிரியர் ஜொனாதன் ஃப்ளெமிங்கைச் சந்தித்தேன். பொது மற்றும் தனியார் துறைகளில் வாழ்க்கை அறிவியலில் அவரது பணி முன்னுதாரணமானது. இந்தத் துறையில் வரவிருக்கும் திறமை மற்றும் புதுமைகளுக்கு வழிகாட்டுவதற்கான அவரது ஆர்வம் ஊக்கமளிக்கிறது’’.

"டாக்டர் ஆன் லிபர்ட்டைச்  சந்தித்ததில் மகிழ்ச்சி. பார்கின்சன் நோய்க்கு சிகிச்சையளிப்பதில் அவரது பணி பாராட்டுக்குரியது. வரும் காலங்களில் பலருக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை அது உறுதி செய்யும்’’.

“பேராசிரியர் வெசெலின் போபோவ்ஸ்கி உடனான சந்திப்பு மகிழ்ச்சியளிக்கிறது. வேகமாக மாறிவரும் உலகில் சர்வதேச உறவுகள் மற்றும் புவிசார் அரசியல் பற்றிய புரிதலை ஆழப்படுத்துவதில் அவர் பாராட்டத்தக்க பணியைச் செய்துள்ளார்’’.

“இயற்பியல் மற்றும் கணிதத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு முன்னணி கல்வியாளரான டாக்டர் பிரையன் கிரீனை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரது படைப்புகள் பரவலாகப் போற்றப்படுகின்றன. வரும் காலங்களில் கல்வி விரிவுரையை அவை வடிவமைக்கும்’’

"இன்று திரு அலெக் ரோஸைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. புதுமை மற்றும் கற்றல் தொடர்பான அம்சங்களை வலியுறுத்தும் ஒரு சிறந்த சிந்தனையாளர் மற்றும் எழுத்தாளராக அவர் முத்திரை பதித்துள்ளார்’’.

"ரஷ்யாவைச் சேர்ந்த முன்னணி விண்வெளி வீரர் திரு ஒலெக் ஆர்டெமியேவ்-ஐச் சந்தித்ததில் மகிழ்ச்சி. சில முன்னோடி பயணங்களில் அவர் முன்னணியில் இருந்துள்ளார். அவரது சாதனைகள் பல இளைஞர்களை அறிவியல் மற்றும் விண்வெளி உலகில் பிரகாசிக்கத் தூண்டும்”

"சிறந்த விண்வெளி வீரரான  திரு. மைக் மாசிமினோவைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், விண்வெளியில் அவருக்கு இருந்த ஆர்வத்தை இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக்குவது பரவலாக அறியப்படுகிறது. கற்றல் மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதில் அவர் எவ்வாறு பணியாற்றுகிறார் என்பதும் பாராட்டுக்குரியது"

***

PKV/KV

 


(Release ID: 2107332) Visitor Counter : 26