நிதி அமைச்சகம்
2025 ஜனவரி மாதம் வரை மத்திய அரசின் பொதுத்துறை கணக்குகளின் மாதாந்திர ஆய்வு
प्रविष्टि तिथि:
28 FEB 2025 4:47PM by PIB Chennai
2025 ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசின் மாதாந்திர கணக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு அதன் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கையின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:-
மத்திய அரசின் வருவாய் ரூ.24,00,412 கோடியாக உள்ளது. (2024-25 திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டில் இது 76.3 சதவீதமாக உள்ளது.)இதில் ரூ.19,03,558 கோடி வரி வருவாயாகவும் (மத்திய அரசின் நிகர பங்கு தொகை), ரூ.4,67,630 கோடி வரி அல்லாத வருவாயாகவும் ரூ.29,224 கோடி கடன் அல்லாத மூலதன வருவாயும் அடங்கும். மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து மாநில அரசுகளுக்கு ரூ.10,74,179 கோடி பிரித்துவழங்கப்பட்டுள்ளது.இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.2,53,929 கோடி கூடுதலாகும்.
மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ.35,69,954 கோடியாகும். (இது 2024-25 திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டில்75.7 %ஆகும்) இதில் ரூ.28,12,595 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.7,57,359 கோடி மூலதனக் கணக்கிலும் அடங்கும். மொத்த வருவாயின செலவினங்களில் ரூ.8,75,461 கோடி கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகையாகும். ரூ.3,37,733 கோடி முக்கிய திட்டங்களுக்கான மானியத் தொகையாக உள்ளது.
**
TS/SV/KPG/KR/DL
(रिलीज़ आईडी: 2107037)
आगंतुक पटल : 34