சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உடல் பருமன் பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை முற்றிலும் சரியானது: திரு லூக் கூட்டின்ஹோ
Posted On:
28 FEB 2025 4:19PM by PIB Chennai
உடல்பருமனை எதிர்த்து போராடுவதில் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை முற்றிலும் சரியானது என்று புதுதில்லியில் உள்ள அங்கன்வாடி மையத்தைப் பார்வையிட்ட திரு லூக் கூட்டின்ஹோ கூறினார். திரு லூக் கோடின்ஹோ ஒரு புகழ்பெற்ற முழுமையான சுகாதார வல்லுநராவார். லூக் கோடின்ஹோ ஹோலிஸ்டிக் ஹீலிங் சிஸ்டம்ஸ் அமைப்பின் இணை நிறுவனர் ஆவார்.
ஊட்டச்சத்து குறித்து பேசிய திரு லூக், மூன்று விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். முதலாவதாக, ஊட்டச்சத்தைச் சரியாகப் பெற குழந்தைகள் நிலையில் இருந்தே முழுக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார். சிறுதானிய உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது உடல் பருமன் பிரச்சனையைத் தீர்க்க உதவும் என்றார். கொழுப்புச் சத்து நிறைந்த உணவு குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
உடல் பருமனைக் குறைக்க, நமது உணவுகளில் சமையல் எண்ணெயின் அளவை 10 சதவீதம் குறைப்பது குறித்து நமது பிரதமர் பேசியுள்ளதைத் திரு லூக் சுட்டிக்காட்டினார். பிரதமரின் பார்வையையும் இந்தியாவை ஆரோக்கியமாக மாற்றுவதற்கான அவரது அக்கறையையும் புரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும் என்று திரு லூக் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2106933
***
TS/PLM/RJ/DL
(Release ID: 2107032)
Visitor Counter : 17