நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரித் துறையில் முதலீட்டு வாய்ப்புகள், சுரங்க ஏலம் குறித்த விளக்கக் கூட்டம் - நிலக்கரி அமைச்சகம் மும்பையில் நடத்தியது

प्रविष्टि तिथि: 28 FEB 2025 2:49PM by PIB Chennai

நிலக்கரித் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு பகுதியாக விளக்கக் கூட்டத்தை மும்பையில் நிலக்கரி அமைச்சகம் இன்று நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரி அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு. விக்ரம் தேவ் தத், நிலக்கரி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முக்கிய பங்குதாரர்கள், தொழில்துறை தலைவர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வல்லுநர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். இந்தியாவில் நிலக்கரி சுரங்கத்தின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் இதில் நடைபெற்றன.

தனியார் துறை பங்களிப்பை விரைவுபடுத்துவதற்கும், உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதற்கும், நிலையான சுரங்க நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் இந்த விளக்கக் கூட்டம் ஒரு தளமாக அமைந்தது. கொள்கை சீர்திருத்தங்கள், எளிதாக வர்த்தகம் செய்தல், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவை தொடர்பான விவாதங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் பேசிய மத்திய நிலக்கரி அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதிலும், மின்சாரத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் நிலக்கரி வகித்துவரும் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை விரைவுபடுத்தவும், இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்கவும், நீடித்த சுரங்க நடைமுறைகளை உறுதி செய்யவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எடுத்துரைத்த அமைச்சர், இதன் காரணமாக தொழிற்சாலைகளும், மின் உற்பத்தி நிலையங்களும் தங்களது எரிசக்தி தேவைகளைத் திறம்பட பூர்த்தி செய்ய முடிந்துள்ளது என்றார். தேவைக்கும், விநியோகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கும், தனிப்பட்ட மற்றும் வர்த்தக நுகர்வோருக்கு தங்குதடையின்றி நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீண்டகால நிலைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த சுரங்க நடைமுறைகளை பின்பற்றுமாறு நிலக்கரி நிறுவனங்களை அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2106901

***

TS/PLM/RJ/KV


(रिलीज़ आईडी: 2106996) आगंतुक पटल : 45
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu