சுரங்கங்கள் அமைச்சகம்
இந்தியப் புவியியல் ஆய்வு அமைப்பின் 175-வது நிறுவன தினக் கொண்டாட்டங்களை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் திரு கிஷன் ரெட்டி 2025 மார்ச் 4 அன்று கொல்கத்தாவில் தொடங்கி வைக்கிறார்
Posted On:
28 FEB 2025 1:50PM by PIB Chennai
நாட்டின் மிகப் பழமையான அறிவியல் அமைப்புகளில் ஒன்றான இந்தியப் புவியியல் ஆய்வு அமைப்பின் 175-வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் திரு கிஷன் ரெட்டி 2025 மார்ச் 4 அன்று கொல்கத்தாவில் தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வில் இந்தியப் புவியியல் ஆய்வு அமைப்பின் தலைமை இயக்குநர் திரு அசித் ஷா, விஞ்ஞானிகள், துறை சார்ந்த பிரமுகர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.
1851-ம் ஆண்டு சர் தாமஸ் ஓல்தம் என்பவரால் நிறுவப்பட்ட இந்தியப் புவியியல் ஆய்வு அமைப்பு, புவியியல் வரைபடம், கனிம கண்டுபிடிப்பு, பேரழிவு ஆய்வுகள், புவி அறிவியல் ஆராய்ச்சி போன்றவற்றில் முக்கிய பங்கு வகித்ததோடு இந்தியாவின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது.
இந்த அமைப்பின் 175-வது நிறுவன தினத்தின் முன்னோட்டமாக 2025 மார்ச் 2 அன்று நாடு முழுவதும் உள்ள இந்தியப புவியியல் ஆய்வு அமைப்பின் அலுவலகங்கள் சார்பில் வாக்கத்தான் நிகழ்வு நடத்தப்பட உள்ளது. மத்திய தலைமையகம் உள்ள கொல்கத்தாவில் சிகே-சிஎல் பூங்காவில் இந்த வாக்கத்தான் நடைபெறும்.
2025 மார்ச் 4 அன்று நடைபெறும் நிறுவன தின விழாவையொட்டி சிறப்பு அஞ்சல் உறை, மை ஸ்டாம்ப், இரண்டு புவி அறிவியல் மொபைல் செயலிகள் வெளியிடப்பட உள்ளன. பல வகையான கண்காட்சிகளும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்பட கண்காட்சிகளும் நடைபெற உள்ளன.
***
TS/SMB/RR/KV
(Release ID: 2106961)
Visitor Counter : 31