சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜே.பி.நட்டா ஒடிசா மாநிலம் பூரியில் பொது சுகாதார அமைப்பின் சிறந்த மற்றும் பிறரும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த 9-வது தேசிய உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார்
Posted On:
28 FEB 2025 2:27PM by PIB Chennai
மத்திய சுகாதாரத அமைச்சர் திரு ஜெ.பி.நட்டா ஒடிசா மாநிலம் பூரியில் அம்மாநில முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி முன்னிலையில், பொது சுகாதார அமைப்பின் சிறந்த மற்றும் பிறரும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த 9-வது தேசிய உச்சி மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் முகேஷ் மகாலிங், பூரி மக்களவை உறுப்பினர் டாக்டர் சம்பித் பத்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாடு, பொது சுகாதாரத் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்வதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பின்பற்றும் பல்வேறு சிறந்த நடைமுறைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தும் வகையில் நடைபெறுகிறது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இடையே பரஸ்பரம் யோசனைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் மற்றும் வாய்ப்புகளைக் கண்டறிவதற்கும் இந்த உச்சி மாநாடு பயனுள்ளதாக அமையும்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய திரு ஜெ.பி.நட்டா, 2014-ம் ஆண்டு முதல் சுகாதாரத் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்றார். தேசிய சுகாதாரக் கொள்கை 2017-ல், நோய்களைக் குணப்படுத்துவது என்ற நிலையிலிருந்து நோய் தடுப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பது போன்ற விரிவான அம்சங்களை உள்ளடக்கிய நடைமுறைய முன்வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். அதேபோன்று, தொடக்க மற்றும் இரண்டாம் நிலையில் உள்ள நகரங்களில் சுகாதாரச் சேவைகளை மேம்படுத்துவதற்கும், மூன்றாம் நிலையில் உள்ள நகரங்களில் சுகாதார கட்டமைப்புகளைப் பராமரிப்பதற்கும் மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மக்களுக்குக் குறைந்த செலவில் தரமான சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், ஆயுஷ்மான் சுகாதார காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் அனைத்தும் சுகாதார சேவைகளுக்கான அடித்தளத்தை வலுப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
"நாட்டின் மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இது உலக நாடுகளின் குறைவு விகிதத்தோடு ஒப்பிடுகையில், இருமடங்காகும். நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்தியது மகப்பேறு இறப்பு விகிதம் குறைவதற்கு முக்கிய காரணியாக உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2106886
------
TS/SV/KPG/KR
(Release ID: 2106935)
Visitor Counter : 43