கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
எளிதாக வர்த்தகம் செய்வதன் மூலம் செயல்திறனை மேம்படுத்த 'ஒரே நாடு-ஒரே துறைமுகம்' என்ற முன் முயற்சியை மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார்
Posted On:
27 FEB 2025 5:35PM by PIB Chennai
இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், அதன் உலகளாவிய வர்த்தக இருப்பை வலுப்படுத்துதல் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் தொடர்ச்சியான முக்கிய முயற்சிகளை மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார். கடல்சார் துறைக்காக மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகளின் பல்வேறு சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க மும்பையில் இன்று நடைபெற்ற பங்குதாரர் கூட்டத்தின் போது இந்த முயற்சிகள் தொடங்கப்பட்டன.
இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் செயல்பாடுகளை தரப்படுத்துவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு முயற்சியான 'ஒரே நாடு-ஒரே துறைமுகம் செயல்முறை' அமைச்சர் தொடங்கிவைத்தார். திறன் பற்றாக்குறை, அதிகரித்த செலவுகள் மற்றும் செயல்பாட்டு தாமதங்களுக்கு வழிவகுக்கும் ஆவணங்கள் மற்றும் செயல்முறைகளில் உள்ள முரண்பாடுகளை அகற்றுவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு சோனாவால், "தற்சார்பு, நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு உந்துதல் தரும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையுடன் இணக்கமானதாக தங்கள் அமைச்சகத்தின் முக்கியமான முயற்சிகளைத் தொடங்குவதில் தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2106662
***
TS/IR/AG/DL
(Release ID: 2106703)