WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

திரைப்பட சுவரொட்டி தயாரிக்கும் போட்டி

 प्रविष्टि तिथि: 24 FEB 2025 7:37PM |   Location: PIB Chennai

திரைப்படங்களுடனான இந்தியாவின் ஆழமான தொடர்பு அதன் திரைப்பட சுவரொட்டிகளில் பிரதிபலிக்கிறது, அவை கதைகளையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கின்றன. இந்தக் கலை வடிவத்தைக் கொண்டாடும் வகையில், உலக ஆடியோ-விஷுவல் பொழுதுபோக்கு உச்சிமாநாடு (வேவ்ஸ்) ''இந்தியாவில் படைப்போம் சவால்  - சீசன் 1’ இன் ஒரு பகுதியாக திரைப்பட சுவரொட்டி தயாரித்தல் சவாலை அறிமுகப்படுத்துகிறது. என்.எஃப்.டி.சி-இந்திய தேசிய திரைப்பட காப்பகம், சர்வதேச திரைப்பட ஆவணக் கூட்டமைப்பு மற்றும் இமேஜ் நேஷன் ஸ்ட்ரீட் ஆர்ட் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படும், இந்தப் போட்டி, இந்திய திரைப்பட சுவரொட்டிகளின் வளமான பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகிறது. ஏற்கனவே 296 பதிவுகளுடன், இந்த நிகழ்வு படைப்பாற்றலின் துடிப்பான காட்சியை உறுதியளிக்கிறது.

 

உலக ஆடியோ விஷுவல் & என்டர்டெயின்மென்ட் உச்சிமாநாடு (வேவ்ஸ்) அதன் முதல் பதிப்பில் ஒரு தனித்துவமான மையமாக உள்ளது மற்றும் ஒட்டுமொத்த  ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் ஒருங்கிணைப்புக்கு தயாராக உள்ளது.

 

இந்த நிகழ்வு ஒரு முதன்மையான உலகளாவிய நிகழ்வாகும், இது உலகளாவிய  ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் தொழில்துறையின் கவனத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதையும், இந்திய  ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்  துறையுடன் அதன் திறமையை  இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

திரைப்பட சுவரொட்டி தயாரிக்கும் போட்டி இரண்டு பிரிவுகளில் நடைபெறும்: டிஜிட்டல் சுவரொட்டிகள் மற்றும் கையால் வரையப்பட்ட சுவரொட்டிகள்.

 

வேவ்ஸ்-இல் திரைப்பட சுவரொட்டி தயாரிக்கும் போட்டி டிஜிட்டல் மற்றும் கையால் வரையப்பட்ட கலை வடிவங்களில் படைப்பாற்றலைக் கொண்டாடவும் வெளிப்படுத்தவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. இந்தத் தளத்தின் மூலம், உலகெங்கிலும் உள்ள கலைஞர்கள் பொழுதுபோக்குத் துறையின் துடிப்பான எதிர்காலத்தை இணைக்கலாம், உருவாக்கலாம் மற்றும் அதன்  ஒரு பகுதியாக இருக்க முடியும், இது மே 2025 இல் வேவ்ஸ் உச்சிமாநாட்டில் கண்காட்சி மற்றும் விருது வழங்கும் விழாவில் முடிவடைகிறது.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105891

 

 

 

(Release ID: 2105891)

 

***


रिलीज़ आईडी: 2105986   |   Visitor Counter: 46

इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Telugu , Kannada