விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் உழவர் நலத்திட்டத்தின் 19-வது தவணையை பீகார் மாநிலம் பாகல்பூரில் பிப்ரவரி 24 அன்று பிரதமர் வெளியிடுகிறார்

ரூ 22,000 கோடிக்கும் அதிகமான நேரடி பணப்பரிவர்த்தனை மூலம் 9.8 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.

10,000 உழவர் உற்பத்தி அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ், 10,000-வது உழவர் உற்பத்தி அமைப்பு உருவாக்கம்

ரூ 33.80 கோடி முதலீட்டில் தேசிய கோகுல் இயக்கத்தின் கீழ், மோதிஹரியில் உள்நாட்டு இனங்களுக்கான பிராந்திய சிறப்பு மையத்தின் திறப்பு விழா.

ரூ 113.27 கோடி முதலீட்டில் பால் உற்பத்தி ஆலை திறப்பு விழா.

ரூ 526 கோடி முதலீட்டில் வாரிசாலிகஞ்ச்-நவாடா-திலையா ரயில் பிரிவு இரட்டைப் பாதை (36.45 கிமீ) கட்டுமானத் திறப்பு விழா

47 கோடி முதலீட்டில் இஸ்மாயில்பூர் - ரபிகஞ்ச் சாலை மேம்பாலத்தின் திறப்பு விழா

Posted On: 22 FEB 2025 1:19PM by PIB Chennai

பிரதமரின் உழவர் நலத்திட்டத்தின் கீழ் வரவிருக்கும் 19 வது தவணை வெளியீடு குறித்து மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். பிரதமரின் உழவர் நலத்திட்டம், 2019 பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்டது.  மத்திய அரசின்  இத்திட்டத்தின் கீழ், , தகுதியுள்ள விவசாயி குடும்பத்திற்குஆண்டுக்கு ரூ. 6,000/-  வீதம் , இதுவரை, ரூ. 3.46 லட்சம் கோடி11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு  வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், மோடி அரசின் முதன்மையான முன்னுரிமை விவசாயிகளின் நலன் என்று கூறினார். உற்பத்தியை அதிகரிப்பது, உற்பத்திச் செலவைக் குறைப்பது, விளைபொருட்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்தல், பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்குதல், விவசாயத்தைப் பன்முகப்படுத்துதல், 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இந்த நிதி திட்டம் போன்ற முக்கியத் திட்டங்களின் மூலம் செலவைக் குறைப்பது ஆகியவை இதன் நோக்கமாகும்.  இந்தத் திட்டம், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நிதி நல்வாழ்வைத் தொடர்ந்து பலப்படுத்தும்   இத்திட்டத்தின் ஆறு ஆண்டுகால வெற்றிகரமான செயல்பாட்டின் அடையாளமாக இருக்கும். இது சம்பந்தமாக, மத்திய விவசாய அமைச்சகம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை ரயில்வே அமைச்சகம், மத்திய அரசு மற்றும் பீகார் அரசு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் பீகாரில் உள்ள பாகல்பூரில் ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் 18-வது தவணை வெளியீட்டின் போது, சுமார் 9 கோடியே 60 லட்சம் விவசாயிகளுக்கு தவணை விடுவிக்கப்பட்டதாக திரு  சிவராஜ் சிங் சவுகான் கூறினார். விவசாய அமைச்சகம் தவறவிட்ட தகுதியுள்ள விவசாயிகளை சேர்க்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, இந்த முயற்சிகள் மூலம் 19-வது தவணை பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 19வது தவணை வெளியீட்டின் மூலம் நாடு முழுவதும் உள்ள 2.41 கோடி பெண் விவசாயிகள் உட்பட 9.8 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள். எந்த இடைத்தரகர்களின் தலையீடும் இல்லாமல் நேரடிப் பயன் பரிமாற்றம் மூலம் ரூ 22,000 கோடிக்கு மேல் நேரடி நிதியுதவியைப் பெற்றுள்ளனர்.  விவசாயிகளின் நலன் மற்றும் விவசாய செழிப்புக்கான அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது

பீகாரில் மட்டும் முந்தைய தவணைகள் மூலம் ரூ 25,497 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளதாகவும், மாநிலத்தில் 86.56 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவதாகவும் அவர் குறிப்பிட்டார். 19-வது தவணையில், சுமார் 76.37 லட்சம் விவசாயிகள் ரூ 1,591 கோடிக்கு மேல் பயனடைவார்கள்.  இதன் மூலம் பீகாரில் உள்ள பயனாளிகளுக்கு மாற்றப்பட்ட மொத்த பயன் தொகை ரூ 27,088 கோடியாக இருக்கும். பகல்பூரில் மட்டும், 18 தவணைகளின் கீழ் இதுவரை ரூ 813.87 கோடிக்கு மேல் சுமார் 2.82 லட்சம் பயனாளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. 19-வது தவணையாக சுமார் 2.48 லட்சம் பயனாளிகள் ரூ 51.22 கோடிக்கு மேல் பலன்களைப் பெறுவார்கள். இதன் மூலம் மொத்த தொகை ரூ 865.09 கோடியை எட்டும்.

 

பாகல்பூரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் பீகார் ஆளுநர் திரு.  ஆரிப் முகமது கான், முதலமைச்சர் நிதிஷ் குமார், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு லாலன் சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்  கலந்து கொள்கின்றனர்.

நாடு முழுவதும் உள்ள 731 வேளாண் அறிவியல் மையங்களிலும் (கேவிகே) நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

 

19வது தவணை வெளியீட்டு நிகழ்வு டிடி கிசானில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும், MyGov, YouTube, Facebook மற்றும் நாடு முழுவதும் உள்ள 5 லட்சத்துக்கும் அதிகமான பொது சேவை மையங்களில் ஒளிபரப்பு  செய்யப்படும் என்றும் திரு  சௌஹான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஏறக்குறைய இரண்டரை கோடி விவசாயிகள் இந்நிகழ்ச்சியில், நேரிலும், மெய்நிகர் வடிவிலும்  இணைவார்கள்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105462

***

PKV/DL


(Release ID: 2105470) Visitor Counter : 22