தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இங்கிலாந்துடனான ஒத்துழைப்பை இந்தியா விரிவுபடுத்தியுள்ளது
Posted On:
21 FEB 2025 1:45PM by PIB Chennai
தொலைத்தொடர்பு துறையில் இந்தியாவின் தலைமைத்துவம் மற்றும் அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பங்களில் இந்தியாவின் விரைவான முன்னேற்றங்கள் ஆகியவை குறித்து இங்கிலாந்தில் நடைபெற்ற தொலைத்தொடர்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வட்டமேசை மாநாட்டில் மத்திய தொலைத் தொடர்பு செயலாளர் டாக்டர் திரு நீரஜ் மிட்டல் விவரித்துள்ளார்.
அடுத்த தலைமுறை தொலைத்தொடர்பு, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆய்வு செய்வது மற்றும் முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு செயலாளர் திரு நீரஜ் மிட்டல், இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டார்.
அந்நாட்டின் தேசிய அறிவியல் ஆலோசகர் திரு கிறிஸ் ஜான்சன், இங்கிலாந்தின் தேசிய தொழில்நுட்ப ஆலோசகர் திரு டேவ் ஸ்மித் ஆகியோரை அவர் சந்தித்தார்.
டிஜிட்டல் உள்கட்டமைப்பு பாதுகாப்பில் வளர்ந்து வரும் 5ஜி, 6 ஜி, தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் அவர்களுடன் விவாதித்தார்.
தொலைத்தொடர்பு பாதுகாப்பு மற்றும் அந்த துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து ஸ்காட்லாந்து நாட்டின் டிஜிட்டல் இயக்குநரகத்தின் இயக்குநர் திரு ஜெஃப் ஹக்கின்ஸையும், மத்திய தொலைத் தொடர்பு செயலாளர் திரு நீரஜ் மிட்டல் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் ஸ்காட்லாந்தின் ஸ்ட்ராத்க்லைட் பல்கலைக்கழகத்தில் உள்ள 5ஜி ஆய்வு மையத்தையும் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ஜேம்ஸ் வாட் பொறியியல் கல்லூரியில் உள்ள 6ஜி ஆராய்ச்சி மையத்தையும் திரு நீரஜ் மிட்டல் பார்வையிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105225
***
TS/GK/AG/KR
(Release ID: 2105248)
Visitor Counter : 28