இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
சத்ரபதி சிவாஜி மகாராஜ் பிறந்த நாளையொட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் 'ஜெய் சிவாஜி ஜெய் பாரத்' பாதயாத்திரையை மேற்கொண்டனர்
Posted On:
19 FEB 2025 4:00PM by PIB Chennai
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இன்று நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சத்ரபதி சிவாஜி மகாராஜின் 395-வது பிறந்த நாளையொட்டி மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் பிரம்மாண்டமான 'ஜெய் சிவாஜி ஜெய் பாரத்' பாதயாத்திரைக்கு தலைமை தாங்கினார்கள். அவர்களுடன் 20,000-க்கும் மேற்பட்ட மை பாரத் இளைஞர் தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.
மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் திரு முரளிதர் மொஹோல், பல்வேறு மாநிலங்களின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்ட மேலவை உறுப்பினர்கள் ஆகியோரும் இந்த பிரமாண்டமான பாதயாத்திரையில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, சத்ரபதி சிவாஜி மகாராஜின் பாரம்பரியத்திலிருந்து இளைஞர்கள் வலிமையைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். சத்ரபதி சிவாஜி மகாராஜின் கொள்கைகளான சுயமரியாதை, கவுரவம் ஆகியவை தற்சார்பு மற்றும் வளமான நாட்டைக் கட்டமைப்பதில் நாட்டின் இளைஞர்களுக்கு தொடர்ந்து வழிகாட்டுவதாக அவர் குறிப்பிட்டார். சத்ரபதி சிவாஜி மகாராஜ் போன்ற தலைவர்கள் நாட்டின் மதிப்புகளை வடிவமைத்து, அடுத்த தலைமுறையினருக்கு அவர்களின் துணிச்சல், தலைமைப் பண்பு, தாய்நாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் ஊக்கமளித்துள்ளனர் என்று எடுத்துரைத்தார். உண்மையான தலைமைத்துவம் என்பது தன்னலமற்ற சேவை மற்றும் நாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பற்றியது என்பதை சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கை நமக்குக் கற்பிக்கிறது என்றும் அவர் கூறினார்.
பின்னர் பேசிய மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், சத்ரபதி சிவாஜி மகாராஜுக்கு உலகளவில் உள்ள மதிப்பு குறித்து எடுத்துரைத்தார். அவரது பிறந்த தினம் இந்தியாவில் மட்டுமல்லாமல் மேலும் 20 நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது என்று குறிப்பிட்டார். ஆளுகை, வரிவிதிப்பு, பாதுகாப்பு, கடற்படை மேலாண்மை ஆகியவற்றில் சிவாஜி மகாராஜின் தொலைநோக்கு தலைமை குறித்து அவர் எடுத்துரைத்தார்.
4 கி.மீ தொலைவிற்கு நடைபெற்ற இந்த பாதயாத்திரை சிஓஇபி கல்லூரியிலிருந்து தொடங்கி பெர்குசன் கல்லூரியில் முடிவடைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104697
-----
TS/IR/KPG/KR/DL
(Release ID: 2104816)
Visitor Counter : 20