தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கலாச்சார நிகழ்வுகளில் இளைய தலைமுறையினரை ஈடுபடுத்தும் வகையில், ஆகாசவாணியின் வளமான மாறுபட்ட இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை தொடர் 'ஹர் காந்த் மே பாரத்' வெற்றிகரமாக நிறைவடைந்தது

Posted On: 18 FEB 2025 10:39PM by PIB Chennai

ஆகாஷ்வாணி, கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து, 15 அத்தியாயங்கள் கொண்ட பாரம்பரிய இசைத் தொடரான ஹர் காந்த் மே பாரத்தை  வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.  இந்த தொடர் 2025 பிப்ரவரி 2-ம் தேதி அன்று வசந்த் பஞ்சமி தினத்தில் தொடங்கப்பட்டது. இது நாடு முழுவதும் உள்ள 21 ஆகாஷ்வாணி நிலையங்களிலிருந்து தினமும் காலை 9:30 மணிக்கு ஒலிபரப்பப்பட்டது. இந்த தொடர் 2025 பிப்ரவரி 16, அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்திய பாரம்பரிய இசையின் வளமான மற்றும் மாறுபட்ட தன்மையை வெளிப்படுத்தும் வகையில் 'ஹர் காந்த் மே பாரத்'  தொடர் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டது. இதில் நாடு முழுவதிலுமிருந்து புகழ் பெற்ற கலைஞர்களின் குரல் மற்றும் இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்தத் தொடர் நாடு முழுவதும் உள்ள நேயர்களுக்கு கலாச்சார ரீதியிலான செறிவான அனுபவத்தை வழங்கியது. நாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ள இசை பாரம்பரியத்திற்கு நெருக்கமாக இந்த நிகழ்ச்சி மக்களை கொண்டு சேர்த்துள்ளது.

***

(Release ID: 2104537)

TS/SV/AG/KR


(Release ID: 2104756) Visitor Counter : 11