விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மண் வள அட்டை திட்டத்தின் 10 ஆண்டுகள்

Posted On: 18 FEB 2025 5:51PM by PIB Chennai

 

மண் வள அட்டை திட்டம் நாளையுடன் (19.02.2025) 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இத்திட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2015 பிப்ரவரி 19 அன்று ராஜஸ்தானின் சூரத்கரில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மண் வள அட்டைகளை வழங்க மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

மண் வள அட்டை விவசாயிகளுக்கு அவர்களின் மண்ணின் ஊட்டச்சத்து நிலை குறித்த தகவல்களை வழங்குவதாகும். மண் ஆரோக்கியத்தையும் அதன் வளத்தையும் மேம்படுத்துவதற்குப் பயன்படுத்த வேண்டிய ஊட்டச்சத்துக்கள் தொடர்பான பரிந்துரைகள் இதன் மூலம் வழங்கப்படுகிறது.

மண் வள அட்டையின் இணையதளமான www.soilhealth.dac.gov.in என்ற தளம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

கடந்த பத்தாண்டுகளில் மண்வள அட்டைத் திட்டம் இந்தியாவில் விவசாய நடைமுறைகளை சிறப்பாக மாற்றி அமைத்துள்ளது. 2015 முதல், மண்ணின் ஊட்டச்சத்து நிலை, உகந்த உர பயன்பாடு குறித்த முக்கியமான தகவல்களை விவசாயிகளுக்கு இது வழங்கி வருகிறது.

​​நிலையான விவசாய வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், நாட்டின் மண்வளத்தைப் பாதுகாப்பதிலும் மண்வள அட்டைத் திட்டம் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் விவரங்களுக்குக் கீழ்க்கண்ட இணைய தள இணைப்புகளைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1603379

https://www.myscheme.gov.in/schemes/rkvyshfshc

https://soilhealth.dac.gov.in/files/FAQ_Final_English.pdf

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2099759

https://rkvy.da.gov.in/

https://soilhealth.dac.gov.in/files/documents/DOletter-1000Schools.pdf

https://www.myscheme.gov.in/schemes/rkvyshfshc

https://play.google.com/store/apps/details?id=com.soilhealthcard&hl=en_IN

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1947891

https://www.myscheme.gov.in/schemes/rkvyshfshc#application-process

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104403

***

PLM/AG/KV

 

 


(Release ID: 2104478) Visitor Counter : 48


Read this release in: English , Urdu , Hindi , Gujarati