இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புனேயில் நாளை ‘ஜெய் சிவாஜி ஜெய் பாரத்’ பாதயாத்திரை - மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் பங்கேற்கின்றனர்

Posted On: 18 FEB 2025 2:40PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியாவும், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிசும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் பிறந்த தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 20,000 மை பாரத் தன்னார்வ இளைஞர் தொண்டர்களுடன் இணைந்து 'ஜெய் சிவாஜி ஜெய் பாரத்' பாதயாத்திரையை நாளை (19.02.2025) புனேவில் மேற்கொள்கிறார்கள். மத்திய விளையாட்டுத்துறை இணை அமைச்சர், திருமதி. ரக்ஷா கட்சே உள்ளிட்டோர் இந்த பாதயாத்திரையில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு சத்ரபதி சிவாஜி மகாராஜின் நீடித்த பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையிலும் அவரது தலைமை, வீரம், துணிச்சலைக் கொண்டாடும் வகையிலும் நடத்தப்படுகிறது.

இந்தப் பாதயாத்திரை சிஓஇபி கல்லூரி மைதானத்தில் தொடங்கி பெர்குசன் கல்லூரியில் முடிவடையும். சுமார் 4 கிலோமீட்டர்  நடைபெறும் இந்தப் பாதயாத்திரையில் இளைஞர்கள், உள்ளூர் பிரமுகர்கள், பொது மக்கள் பங்கேற்கின்றனர். மகாராஷ்டிராவின்  அனைத்து 36 மாவட்டங்களிலும் இதுபோன்ற பாதயாத்திரைகளுக்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

***

(Release ID: 2104326)

TS/PLM/AG/KR


(Release ID: 2104335) Visitor Counter : 30