உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக உணவு இந்தியா கண்காட்சி-2024 நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் வட்டமேசை உரையாடல்

Posted On: 18 FEB 2025 2:06PM by PIB Chennai

மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகமானது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் குடியிருப்பு ஆணையர்களுடனும் பிரதிநிதிகளுடனும், 2025 பிப்ரவரி 17, வட்டமேசை உரையாடலை  நடத்தியது. இதற்கு அமைச்சகத்தின் செயலாளர் தலைமை வகித்தார். உலக உணவு இந்தியா 2025 கண்காட்சிக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்  ஒத்துழைப்பு அளிப்பது  குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

உணவு பதப்படுத்தும் துறையின் கூடுதல் செயலாளர் திரு மின்ஹாஜ் ஆலம் தனது வரவேற்பு உரையில், இந்த உலக உணவு இந்தியா நிகழ்வு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தங்களின் வாய்ப்புகளை வெளிப்படுத்தவும், உலகளாவிய, உள்நாட்டு வணிக  நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், தொழில்நுட்பதுறையினருடன் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ளவும் ஒரு தளத்தை வழங்கும் என்று எடுத்துரைத்தார்.

உலக உணவு  இந்தியா 2025 என்ற நிகழ்வு 2025 செப்டம்பர் 25 முதல் 28 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே நடந்த நிகழ்வுகளை விட மிகப் பெரிய அளவில்  இதை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

உணவுப் பதப்படுத்தும் துறை இணைச் செயலாளர் திரு டி. பிரவீன் தமது நிறைவுரையில், இந்திய உணவு பதப்படுத்தும் துறையின் வலிமையை எடுத்துக்காட்ட, இந்த நிகழ்வில் தங்கள் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகத்துடன் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இணைந்து  தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

***

(Release ID: 2104321)

TS/PLM/AG/KR

 


(Release ID: 2104331) Visitor Counter : 21