குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவர், பிப்ரவரி 17, 2025 அன்று பஞ்சாப் மாநிலம் சண்டிகர் & மொஹாலிக்கு வருகை தருகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
16 FEB 2025 7:18PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர், பிப்ரவரி 17, 2025 அன்று பஞ்சாப் மாநிலம் சண்டிகர் & மொஹாலிக்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தனது பயணத்தின் போது, மொஹாலியில் உள்ள தேசிய வேளாண் உணவு மற்றும் உயிரி உற்பத்தி நிறுவனத்தில் உள்ள மேம்பட்ட தொழில்முனைவு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்ட வளாகத்தின் தொடக்க விழாவில் குடியரசு துணைத்தலைவர் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் ஒரு ஊடாடும் அமர்வுக்கு திரு தன்கர் தலைமை தாங்குவார்.
(வெளியீட்டு அடையாள எண்: 2103983)
வருகையாளர் எண்ணிக்கை : 47