இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மும்பை மற்றும் தில்லியில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ நிகழ்வுகளில் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மல்யுத்த வீராங்கனை ஷிவானி பவார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்

Posted On: 15 FEB 2025 7:34PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, பிப்ரவரி 16, 2025 அன்று மும்பையில் நடைபெறும் '‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்' நிகழ்ச்சியில் பல்வேறு வகையான சைக்கிள் ஓட்டுநர்  குழுக்களுடன் இணைகிறார். 'உடல் பருமனை எதிர்த்துப் போராடுவோம்' என்ற கருப்பொருளை முன்வைத்து, மும்பையில் கேட்வே ஆஃப் இந்தியாவில் இருந்து கிர்கான் சௌபட்டி வரை காலை 7 மணி முதல் இந்த நிகழ்வு நடைபெறும்.

சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வில் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சருடன் லைஃப் பயிற்சியாளரும் ஃபிட் இந்தியா தூதருமான டாக்டர் மிக்கி மேத்தா, இந்திய ஆடை வடிவமைப்பாளரும் சமூக சேவகருமான ஷைனா நானா சுதாசமா, பி.ஒய்.சி.எஸ் இந்தியா அறக்கட்டளையின் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பைரவி நாயக் ஜோஷி,  மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள்.

ஒரே நேரத்தில் நாடு முழுவதும் பல இடங்களில்  இந்த நிகழ்வு நடைபெறும். 2024 சீனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றவரும், 2025 தேசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றவருமான ஷிவானி பவார், புதுதில்லியில் காலை 8 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பிராந்திய மையங்கள், தேசிய சிறப்பு மையங்கள் மற்றும் கேலோ இந்தியா மையங்களில் சைக்கிள் ஓட்டும் இந்த நிகழ்வு நடைபெறுவது, குறிப்பிடத்தக்கது. 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2103632 

***************

BR/KV


(Release ID: 2103761) Visitor Counter : 15