மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
காசி தமிழ் சங்கமம் 3.0 : வேற்றுமையில் ஒற்றுமையின் கொண்டாட்டம்
Posted On:
14 FEB 2025 6:16PM by PIB Chennai
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2025 பிப்ரவரி 15 முதல் 24 வரை காசி தமிழ் சங்கமம் 3.0 நடைபெறவுள்ளது. காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான தொன்மை நாகரீக பிணைப்பை கொண்டாடுவதையும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த சிறப்புமிக்க கலாச்சார நிகழ்வுக்கு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் உத்தரப்பிரதேச அரசின் ஒத்துழைப்புடன் மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த இரண்டு பகுதிகளையும் சேர்ந்த அறிஞர்கள், மாணவர்கள், தத்துவ ஞானிகள், வணிகர்கள், கலைஞர்கள், கைவினைஞர்கள், வாழ்க்கையின் அனைத்து பகுதி மக்களுக்கும் வாய்ப்பளிப்பதாக காசி தமிழ் சங்கமம் திகழ்கிறது.
அயோத்தியில், ஸ்ரீ ராமபிரானின் பிராணப்பிரதிஷ்டை செய்த பின், நடைபெறும் முதலாவது சங்கமம் என்பது மகா கும்பமேளாவுடன் இணைந்தது என்பதும் இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் தனி முக்கியத்துவம் பெறுகிறது.
சித்த மருத்துவ முறைக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் மிகவும் மதிக்கத்தக்க முனிவரான மகரிஷி அகத்தியரின் முக்கியப் பங்களிப்பு இந்த 3-வது ஆண்டு நிகழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மகரிஷி அகத்தியரின் ஞானம், தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவற்றுக்கு அடித்தளம் அமைத்திருப்பதோடு மாண்புகளையும், அறிவுப் பாரம்பரியத்தையும் பகிர்ந்து வழங்கியுள்ளது. இது குறித்த கண்காட்சி காசி தமிழ் சங்கமத்தில் இடம் பெறுகிறது. இதையொட்டி கருத்தரங்குகள், பயிலரங்குகள், நூல் வெளியீடுகள் ஆகியவை இடம் பெறும்.
2022-ம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட காசி தமிழ் சங்கமத்தின் வெற்றியையடுத்து 17.12.2023 முதல் 30.12.2003 வரை நமோ படித்துறையில் 2-வது நிகழ்வு நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2103308
***
SMB/KPG/DL
(Release ID: 2103370)
Visitor Counter : 51