சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
ஜம்முவில், தூய்மை பணியாளர்களுக்கு பிரதமரின் மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் தனிநபர் பாதுகாப்பு கவச ஆடைத் தொகுப்புகளை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் வழங்கினார்
Posted On:
14 FEB 2025 2:21PM by PIB Chennai
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து அறிந்து கொள்ள சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்தர் குமார், பயணம் மேற்கொண்டார். ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கழிவுநீர் அகற்றும் மற்றும் கழிவுநீர் தொட்டிகளைத் தூய்மைப்படுத்தும் தொழிலாளர்களுக்கு தனிநபர் பாதுகாப்பு கவச ஆடைகள், கருவிகள் மற்றும் பிரதமரின் மருத்துவ காப்பீடு அட்டைகளை அமைச்சர் வழங்கினார்.
தமது பயணத்தின் போது, போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்கும் செயல் திட்டத்தின் கீழ், ஜம்முவில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் இளைஞர்களுக்கான அமைப்பையும் அமைச்சர் பார்வையிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2103177
***
TS/GK/RR/KR
(Release ID: 2103195)
Visitor Counter : 33