தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மஹாகும்ப மேளா 2025: மக பூர்ணிமா தினத்தையொட்டி புனித நீராட வரும் யாத்ரீகர்களுக்கு போக்குவரத்துக்கான கூடுதல் ஏற்பாடுகள்
Posted On:
11 FEB 2025 10:26PM by PIB Chennai
பிரயாக்ராஜ் மக பூர்ணிமா தினத்தையொட்டி புனித நீராடுவதற்காக திரிவேணி சங்கமம் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பெரும் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் விரிவான போக்குவரத்து ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு செய்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் மற்றும் கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது பக்தர்களின் போக்குவரத்து வசதியை மேலும் எளிமையாக்கும்,
பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக 1200 முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படுகின்றன.
பிப்ரவரி 11 மாலைக்குள், மக பூர்ணிமா தினத்தையொட்டி திரிவேணி சங்கமத்தில் ஏராளமானோர் புனித நீராட உள்ளதாக எதிர்பார்க்கப்படுவதையடுத்து அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநில அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. 2025-ம் ஆண்டு மகாகும்பமேளாவின் புனித நீராடுதல் நிகழ்வுகளை வெற்றிகரமாகக் கையாளும் வகையில், 1200 கூடுதல் கிராமப்புற பேருந்துகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு தயா சங்கர் சிங் தெரிவித்துள்ளார். மகா கும்பமேளாவிற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 3050 பேருந்துகளுக்கும் கூடுதலாக, பயணிகளின் வசதிகளைக் கருத்தில் கொண்டு சீரான போக்குவரத்தை இது உறுதிப்படுத்தும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பயணிகள் எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ளாமல், நான்கு தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு சென்று தங்களது பயணத்தைத் தொடர ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பேருந்து இயக்க வகை செய்யப்பட்டுள்ளது.
மஹா கும்பமேளா நிகழ்வு நடைபெறும் இடத்திலிருந்து தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு செல்லும் வகையில் இணைப்புப் பேருந்துகளும் ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்டு வருகிறது.
***
(Release ID: 2102067)
TS/SV/KPG/KR
(Release ID: 2102239)
Visitor Counter : 16