பாதுகாப்பு அமைச்சகம்
இங்கிலாந்து, இத்தாலி நாடுகளுடன் பாதுகாப்பு இணையமைச்சர் பேச்சு வார்த்தை
Posted On:
11 FEB 2025 7:45AM by PIB Chennai
பெங்களூருவில் நடைபெறும் 15-வது ஏரோ இந்தியா கண்காட்சியில் முக்கிய நிகழ்வுகளுக்கு இடையே, பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தொடர்ச்சியாக இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். இத்தாலியின் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு. மேட்டியோ பெரெகோ டி கிரெம்னாகோவுடனான சந்திப்பின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்தியாவில் கருவிகள் உற்பத்தி திறன் வளர்ச்சி குறித்தும் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவதன் உறுதிப்பாடு குறித்தும் அப்போது அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இங்கிலாந்து அமைச்சர் லார்ட் வெர்னான் கோக்கருடனான சந்திப்பின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரு அமைச்சர்களும் விவாதித்தனர். இந்தோ-பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், கடல்சார் மற்றும் பிற களங்களில் சுதந்திரமாகவும், சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்யவும், இருதரப்பும் பிற ஒத்துழைப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை இருவரும் வலியுறுத்தினர்.
தொடர்ந்து தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான லெசோதோ நாட்டின் பிரதமர் அலுவலக அமைச்சர் திரு. லிம்போ டாவ்வை பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் சந்தித்தார். பாதுகாப்பு ஏற்றுமதியில் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் விரிவுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101574
***
TS/GK/RJ/KR
(Release ID: 2101686)