மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியக் கல்வி முறையின் செயல்பாடுகளை அளவிடுதல்

प्रविष्टि तिथि: 10 FEB 2025 5:16PM by PIB Chennai

கல்வி என்பது நாட்டின்  நாகரீகத்தை வெளிப்படுத்துவதுடன் மனிதகுலத்தின் எதிர்கால சிற்பியாகவும் திகழ்கிறது.

~பிரதமர் திரு நரேந்திர மோடி

கல்விக்கு எப்போதும் மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. உலகளாவிய கல்வி மையமாக இந்தியாவை உருவாக்கும் நோக்குடன், 2025-26-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. இந்தப் பட்ஜெட்டில் பல்வேறு புதுமையான முயற்சிகள் குறித்தும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான  இடங்களை அதிகரித்தல், திறன் மேம்பாட்டிற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், வளர்ந்து வரும் தொழில்நுட்பத் தேவையைக் கருத்தில் கொண்டு இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டத்தை வகுப்பது ஆகியவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. இத்தகைய நடவடிக்கைகள், மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதுடன், எதிர்காலத்திற்கு தேவையான அத்தியாவசிய திறன்களை வளர்த்துக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

உயர் கல்விக்கு டிஜிட்டல் வடிவிலான இந்திய மொழிப் புத்தகங்களை வழங்குவதன் மூலம்,  மாணவர்கள் தங்கள் பாடங்களை நன்கு புரிந்துகொள்ள உதவுவதே  இதன் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101363

***

SV/KPG/DL


(रिलीज़ आईडी: 2101501) आगंतुक पटल : 101
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam