விவசாயத்துறை அமைச்சகம்
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு, மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகானை சந்தித்தார்
प्रविष्टि तिथि:
07 FEB 2025 5:05PM by PIB Chennai
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு இன்று புதுதில்லியில் உள்ள கிரிஷி பவனில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகானை சந்தித்து ஆந்திராவில் மிளகாய் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதித்தார்.
இந்த சந்திப்பின்போது வேளாண் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் உடனிருந்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு, ஆந்திர அரசு மிளகாயை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், பல்வேறு திட்டங்களின் கீழ் மாநில அரசுக்கு நிதி உதவி வழங்குமாறு மத்திய வேளாண் அமைச்சரை வலியுறுத்தியதாகவும் கூறினார். ஆந்திர அரசின் கோரிக்கைக்கு திரு சிவராஜ் சிங் சௌகான் சாதகமாகப் பதிலளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மிளகாய் விவசாயிகளின் பிரச்சனைகளை விளக்கும் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடுவின் கடிதத்தை திரு சிவராஜ் சிங் சௌகானிடம் ஒப்படைத்ததாக திரு ராம்மோகன் நாயுடு கூறினார்.
***
TS/SMB/AG/DL
(रिलीज़ आईडी: 2100792)
आगंतुक पटल : 47