பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ஒடிசாவில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின் அமலாக்கம்
Posted On:
07 FEB 2025 1:26PM by PIB Chennai
பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டமானது ஒடிசாவில் வளர் இளம் பெண்களுக்கு சுய மரியாதை மற்றும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வளர் இளம் பெண்கள் குழந்தைத் திருமணத்தை வேண்டாம் என்று சொல்லவும் கருவில் பாலினம் அறிந்து தேர்ந்தெடுப்தையும் பெண் கருக்கலைப்பையும் எதிர்த்து போராடவும் தொடர்ந்து கல்வி கற்கவும் இத்திட்டம் ஊக்கம் அளிக்கிறது என்று ஒடிசா மாநில அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் இலக்குகளை எட்டும் வகையில் ஒடிசா மாநில அரசு பல்வேறு முன்முயற்சிகளை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, பயமறியா சிறுமி, எனது அன்பு மகள், சுவர்ணகலிகா, வீராங்கனைத் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் வளர் இளம் பருவ பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் மேம்பாடு உறுதி செய்யப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100589
-----
TS/SV/KPG/RR
(Release ID: 2100707)
Visitor Counter : 35