நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தேசிய நுகர்வோர் உதவி தொலைபேசி எண் அமைப்பை ஏற்படுத்துதல்

Posted On: 07 FEB 2025 11:36AM by PIB Chennai

நுகர்வோரின் குறைகளுக்குத் தீர்வு காணும் நடைமுறைகளை மேம்படுத்தும் வகையில், நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தேசிய நுகர்வோர் உதவி தொலைபேசி எண் அமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் பகுதி வாரியாக குறைகளைப் பகுத்தாய்வு செய்து தீர்வு காண வழி கிடைக்கும்.

இந்தப் புதிய தொழில்நுட்பம் அடிப்படையிலான அணுகுமுறை நுகர்வோர் தொடர்பான விவகாரங்களுக்கு விரைவாகவும், திறமையாகவும் தீர்வு காணும் நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் விளைவாக அதிக எண்ணிக்கையிலான தேசிய நுகர்வோர் உதவி தொலைபேசி எண் வாயிலாக பெறப்படும் அழைப்புகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்படும். 2015-ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் 12,553 அழைப்புகளாக இருந்த எண்ணிக்கை, 2024-ம் ஆண்டு டிசம்பரில் 1,55,138 அழைப்புகளாக பத்து மடங்கு அதிகரித்துள்ளது.  இது அதிகரித்து வரும் நுகர்வோரின் நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

எனவே, அனைத்து நுகர்வோர்களும், 1915 என்ற தேசிய நுகர்வோர் உதவி தொலைபேசி வசதியைப்  பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், நுகர்வோர் https://consumerhelpline.gov.in/user/signup.php என்ற இணையதள முகவரியிலும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான தங்களது குறைகளைத் தெரிவித்து தீர்வு காணலாம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100545

                                     *** 
TS/SV/KPG/RR


(Release ID: 2100582) Visitor Counter : 25