வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் உள்ள நகரங்கள்
Posted On:
06 FEB 2025 5:18PM by PIB Chennai
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (MoHUA), தகுதியுள்ள அனைத்து நகர்ப்புற பயனாளிகளுக்கும் அடிப்படை வசதிகளுடன் கூடிய பக்கா வீடுகளை வழங்குவதற்காக ஜூன் 25, 2015 முதல் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அனைத்து சட்டப்பூர்வ நகரங்களிலும், பின்னர் அறிவிக்கப்பட்ட நகரங்களிலும், அறிவிக்கப்பட்ட திட்டமிடல்/மேம்பாட்டுப் பகுதிகள், பெருநகர நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அனுப்பிய கோரிக்கைகளின் அடிப்படையில் நகரங்கள் மற்றும் மேம்பாட்டு ஆணையப் பகுதிகள் அமைச்சகத்தால் இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள அனைத்து பெருநகரங்கள் உட்பட 4,618 நகரங்கள்/பெருநகரகங்கள் உட்படநகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் சமர்ப்பித்த திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 118.64 லட்சம் வீடுகள் அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 112.50 லட்சம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதில் 90.25 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு 27.01.2025 நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தை 9 ஆண்டுகள் செயல்படுத்தியதன் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில், அமைச்சகம் இந்தத் திட்டத்தை புதுப்பித்து, நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் செயல்படுத்துவதற்காக 'அனைவருக்கும் வீடு' திட்டத்தை 01.09.2024 முதல் தொடங்கியுள்ளது.
இந்தத் தகவலை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை இணையமைச்சர் திரு தோகன் சாஹு இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100339
***
TS/PKV/AG/DL
(Release ID: 2100427)
Visitor Counter : 50