உள்துறை அமைச்சகம்
இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் வேலி அமைத்தல்
Posted On:
04 FEB 2025 2:46PM by PIB Chennai
இந்தியா-பங்களாதேஷ் எல்லையின் மொத்த நீளம் 4096.7 கிலோ மீட்டர் ஆகும். இதில் 3232.218 கிலோ மீட்டர் நீளத்துக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
எல்லையை பாதுகாக்க வேலி அமைப்பது ஒரு முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும். எல்லை தாண்டிய குற்ற நடவடிக்கைகள், கடத்தல், குற்றவாளிகளின் நடமாட்டம் ஆகிய சவால்களை திறம்பட எதிர்கொண்டு பாதுகாப்பான எல்லையை உறுதி செய்ய வேலி உதவுகிறது. வேலி அமைப்பது உட்பட எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, அனைத்து நெறிமுறைகளையும், ஒப்பந்தங்களையும் இந்தியா பின்பற்றுகிறது.
இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் 864.482 கிலோ மீட்டர் நீளத்திற்கு இன்னும் வேலி அமைக்கப்படவில்லை, இதில் 174.514 கிலோ மீட்டர் நீளம் சாத்தியமில்லாத பகுதியாகும். சாத்தியமான பகுதிகளில் வேலி அமைத்து முடிப்பதில், நிலம் கையகப்படுத்துதல், நிலச்சரிவு போன்ற சவால்கள் உள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.
----
TS/PLM/KPG/KR/DL
(Release ID: 2099785)
Visitor Counter : 37