தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நேரடி ஒளிபரப்பில் தவறான தகவல்களைத் தடுக்க செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகள் - வேவ்ஸ் 2025-ல் ஹேக்கத்தான் போட்டி
Posted On:
04 FEB 2025 12:12PM by PIB Chennai
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமானது இந்திய செல்லுலார் - எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ICEA-ஐசிஇஏ) உடன் இணைந்து ட்ரூத்டெல் ஹேக்கத்தான் சவாலை அறிவித்துள்ளது. உலக ஆடியோ விஷுவல் - பொழுதுபோக்கு உச்சி மாநாடான வேவ்ஸ்-2025-ன் (WAVES) கிரியேட் இன் இந்தியா முதல் பகுதியின் (CIC - சீசன் 1) ஒரு பகுதியாக இந்த ஹேக்கத்தான் போட்டி நடத்தப்படவுள்ளது. இந்தச் சவால் நேரடி ஒளிபரப்பில் தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்கு செயற்கை நுண்ணறிவு மூலமான தீர்வுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடி முயற்சியாகும்.
இன்றைய வேகமான ஊடகச் சூழலில், தவறான தகவல்கள் வேகமாகப் பரவுகின்றன. குறிப்பாக நேரடி ஒளிபரப்புகளின் போது இது போன்ற தகவல்கள் அதிகம் பரவுகின்றன. உடனுக்குடன் தவறான தகவல்களைக் கண்டறிவதற்கான இந்தப் போட்டி ஒளிபரப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் ஆகியோருக்கு முக்கியமானதாகும்.
ரூ.10 லட்சம் பரிசு அறிவிப்புடன் இப்போட்டி நடத்தப்படுகிறது. உடனடியாகத் தவறான தகவல்களைக் கண்டறிதல், உண்மை சரிபார்ப்புக்கான செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்காகஹேக்கத்தான் பங்கேற்பாளர்கள், தரவு விஞ்ஞானிகள், ஊடக வல்லுநர்கள் ஆகியோரை இந்தச் சவால் அழைக்கிறது. வெற்றி பெறும் அணிகள் முன்னணி தொழில்நுட்ப நிபுணர்களிடமிருந்து பரிசுகள், வழிகாட்டுதல் வாய்ப்புகள், தொழில் வளர்ச்சிக்கான ஆதரவு ஆகியவற்றைப் பெறும்.
இந்த ஹேக்கத்தான் இப்போது பெரும் ஆர்வத்தைப் பெற்றுள்ளது. உலக அளவில் 5,600 க்கும் மேற்பட்ட பதிவுகள் இதுவரை நடைபெற்றுள்ளன. இதில் 36% பெண்களின் பங்கேற்பு உள்ளது.
பிரதான நோக்கங்கள்
நேரடி ஒளிபரப்புகளில் தகவல்களை கண்டறிந்து சரிபார்ப்பதற்கான செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உருவாக்குதல் மற்றும்
ஊடக சூழலில் நம்பிக்கை, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல்,
செய்தி அறிக்கையில் செயற்கை நுண்ணறிவின் நெறிமுறைப் பயன்பாட்டை ஊக்குவித்தல் ஆகும்.
இந்த ஹேக்கத்தான் தொடர்பான முக்கிய தேதிகள்:
முன்மாதிரி சமர்ப்பிக்க காலக்கெடு 2025 பிப்ரவரி 21
இறுதி விளக்கக்காட்சிகள் மார்ச் 2025 இறுதி.
வெற்றியாளர்கள் அறிவிப்பு -வேவ்ஸ் உச்சி மாநாடு 2025
பங்கேற்பு விவரங்கள், பதிவுக்கு இந்த இணையதள இணைப்பை பார்க்கவும் httpsicea.org.intruthtell
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099431
-----
TS/PLM/KPG/KR
(Release ID: 2099517)
Visitor Counter : 63
Read this release in:
Khasi
,
English
,
Gujarati
,
Urdu
,
Nepali
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam