நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள்
Posted On:
03 FEB 2025 4:50PM by PIB Chennai
நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள நிலக்கரி/லிக்னைட் நிறுவனங்களில் அதாவது, இந்திய நிலக்கரி நிறுவனம், நெய்வேலி அனல்மின் நிறுவனம், மற்றும் சிங்கரேணி கோலியரிஸ் நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரியும் நபர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அமைச்சகம் வெளியிட்டுள்ளது . அதன்படி இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 3,30,318 பேரும், சிங்கரேணி கோலியர்ஸ் நிறுவனத்தில் 40,893 பேரும் நெய்வேலி அனல்மின் நிறுவனத்தில் 20,811 பேரும் பணிபுரிகின்றனர்.
அனைத்து நிலக்கரி சுரங்கங்களும் 1952-ம் ஆண்டு சுரங்கச் சட்டம், அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன. 1952-ம் ஆண்டு சுரங்கப் பாதுகாப்பு இயக்குநரகத்தால் பொருத்தமான சட்டங்கள், விதிகள், ஒழுங்குமுறைகள், தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்கள், ஆய்வுகள், விபத்து விசாரணை, விழிப்புணர்வு நடவடிக்கைகள், இடர் மேலாண்மைத் திட்டங்களை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள நிலக்கரி நிறுவனங்களில், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் கட்டமைப்பு மூலம் நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களுக்கு விரிவான சுகாதாரச் சேவைகள் வழங்கப்படுகின்றன.
நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களுக்குக் காற்றில் பரவும் நிலக்கரி தூசியால் நிமோகோனியோசிஸ், சிலிகோசிஸ் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உருவாகக்கூடும். ஆனால், நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள நிலக்கரி நிறுவனங்களில் சமீபத்திய ஆண்டுகளில் நிமோகோனியோசிஸ், சிலிகோசிஸ் பாதிப்பு ஏதுமில்லை.
தொழில்சார் நோய்களைக் கண்காணித்து தடுக்க, குறிப்பாக அதிக ஆபத்துள்ள சுரங்கப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் மற்றும் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
புதியதாகப் பணியமர்த்தப்பட்ட அனைவருக்கும் வேலைவாய்ப்புக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்தத் தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099176
***
TS/IR/AG/KV
(Release ID: 2099360)
Visitor Counter : 28