பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
வர்த்தகம் புரிதலை எளிதாக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தீர்வுகளுடன் ஏப்ரல் 2024 முதல் ஜனவரி 2025 வரை பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் 80.26 லட்சம் படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன
Posted On:
03 FEB 2025 5:53PM by PIB Chennai
தேசிய மின்-ஆளுமைத் திட்டத்தின் கீழ், மத்திய பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகத்தின் முதலாவது பயன்முறைக்கான மின்-ஆளுமைத் திட்டமாக எம்.சி.ஏ.21 இருக்கிறது. பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகம் 2006-ம் ஆண்டு முதல் நிறுவனங்கள் மற்றும் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுவனங்கள் ஆகியவற்றின் பதிவு மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான சேவைகளுக்காக இந்த இணையதளத்தை முழுமையாக செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் பெருநிறுவனங்கள் தங்களது அறிக்கைகளை இந்த இணையதளத்தில் தாக்கல் செய்து வருகின்றனர். 01.04.2024 முதல் 27.01.2025 வரையிலான காலகட்டத்தில், இந்த இணையதளத்தில் மொத்தம் 80.26 லட்சம் படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 6.97 லட்சம் படிவங்கள் கூடுதலாக இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட எம் சிஏ21 வி3 இணையதளத்தில் 01.04.2024 முதல் 27.01.2025 வரை 53.08 லட்சம் படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த இணையதளம் வர்த்தகம் புரிதலை எளிதாக்குகிறது. மேலும், இணைய அடிப்படையிலான படிவங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நிறுவனங்கள் தங்களது தரவுகளை சரிபார்த்துக்கொள்ள முடியும்.
மத்திய பெருநிறுவன விவகாரங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் இணையமைச்சருமான திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099218
***
TS/SV/RJ/KV
(Release ID: 2099294)
Visitor Counter : 29