இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் 250க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுநர்கள் உடல் பருமனுக்கு எதிரான பேரணியில்  பங்கேற்றனர்

Posted On: 02 FEB 2025 3:17PM by PIB Chennai

 

மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவில் உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கான  பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை முன்னோக்கி எடுத்து, ஞாயிற்றுக்கிழமை  சைக்கிள் பேரணியை மேற்கொண்டு வருகிறார்மேஜர் தயான்சந்த் ஸ்டேடியத்தில் நடந்த இந்த வார ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள் நிகழ்வில் அமைச்சருடன் எண்ணற்ற மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பங்கேற்றனர்.

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் பதக்கம் வென்ற ரூபினா பிரான்சிஸ் மற்றும் தில்லி பாரதி கல்லூரி மற்றும் சோனியா விஹார் வாட்டர் ஸ்போர்ட்ஸ் கிளப்பைச் சேர்ந்த பல இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

உடல் பருமன் என்பது இளைஞர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை மற்றும் பெரிய சவாலாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் எட்டு பேரில் ஒருவர் பருமனானவர் என்று கூறுகிறது. எனவே, இந்த நாட்களில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மிகவும் முக்கியமானது. டேராடூனில் நடைபெற்ற 38வது தேசிய விளையாட்டுப் போட்டியில்  பிரதமர் திரு நரேந்திர மோடி இதைப் பற்றி குறிப்பிட்டார். நாம் எண்ணெய் நுகர்வைக் குறைக்க வேண்டும் மற்றும் நமது உணவு மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். உடல் பருமனுக்கு எதிரான இந்த போராட்டத்தில் சைக்கிள் ஓட்டுதல் தொடர்ந்து நன்மை பயக்கும். ஃபிட் இந்தியா மூலம், இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றிபெற முடியும், என்று இந்த நிகழ்வில் டாக்டர் மாண்டவியா குறிப்பிட்டார்.

ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள் நிகழ்வு உடல் பருமனுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை நோக்கி நகர்வதில் ஒரு சிறந்த படியாகும் என்பதை ரூபினா பிரான்சிஸ் வெளிப்படுத்தினார்.

ரைடர்ஸ் குழுவின் ஒரு அங்கமாக இருந்த நீரிழிவு மற்றும் உடல் பருமன் நிபுணர் டாக்டர் திரிபுவன் குலாட்டி, பல உடல்நல அபாயங்கள் உடல் பருமன் பிரச்சனைகளை பட்டியலிட்டார்.

மூத்த குழந்தை மருத்துவரும், இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) உறுப்பினருமான டாக்டர் பியூஷ் ஜெயின், உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதில் சைக்கிள் ஓட்டுவது ஒரு நேர்மறையான நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.

டாக்டர் மாண்டவியா கடந்த ஆண்டு டிசம்பர் 17 அன்று இதே இடத்தில் இந்த தனித்துவமான சைக்கிள் ஓட்டுதலைத் தொடங்கினார், அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் இந்தியா முழுவதும் பல சைக்கிள் ஓட்டுதல்கள் நடத்தப்பட்டன. நாடு முழுவதும் 3 லட்சத்துக்கும் அதிகமான ரைடர்ஸ் பங்கேற்புடன் 3500க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098905

***

PKV/KV


(Release ID: 2098983) Visitor Counter : 33