குடியரசுத் தலைவர் செயலகம்
அமிர்த பூந்தோட்டத் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்
இந்தத் தோட்டம் பிப்ரவரி 2 முதல் பொதுமக்களுக்கு திறக்கப்படும்
Posted On:
01 FEB 2025 1:35PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 1, 2025) அமிர்த பூந்தோட்ட திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்தத் தோட்டம் பிப்ரவரி 2 முதல் மார்ச் 30 வரை பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படும்.
பராமரிப்பு நாட்களாகக் கருதப்படும் திங்கட்கிழமைகளைத் தவிர, வாரத்தில் ஆறு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தப் பூந்தோட்டத்தைப் பார்வையிடலாம். பிப்ரவரி 5-ம் தேதி (தில்லி சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவு காரணமாக), பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் (குடியரசுத்தலைவர் மாளிகையில் பார்வையாளர்கள் மாநாடு காரணமாக) மற்றும் மார்ச் 14-ம் தேதி (ஹோலி காரணமாக) தோட்டம் மூடப்படும்.
மார்ச் 26 – ந் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும், மார்ச் 27-ந் தேதி பாதுகாப்பு, துணை ராணுவம் மற்றும் காவல் படையினருக்கும், மார்ச் 28 - ந் தேதி பெண்கள் மற்றும் பழங்குடி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், மார்ச் 29 – ந் தேதி மூத்த குடிமக்களுக்கும் பிரத்யேகமாக தோட்டம் திறந்திருக்கும்.
பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். https://visit.rashtrapatibhavan.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098410
***
TS/PKV/RR/KR
(Release ID: 2098590)
Visitor Counter : 21