நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இளைஞர்களின் மன ஆரோக்கியம் எதிர்காலப் பொருளாதாரத்தை வழிநடத்தும்: பொருளாதார ஆய்வறிக்கை

Posted On: 31 JAN 2025 1:34PM by PIB Chennai

மன நலம் என்பது வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு உற்பத்தி ரீதியாக செயல்படும் திறன் ஆகும். மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2024-25 பொருளாதார ஆய்வறிக்கையில் இது பற்றி கூறப்பட்டுள்ளது.

வாழ்க்கை முறை தேர்வுகள், பணியிட கலாச்சாரம் மற்றும் குடும்ப சூழ்நிலைகள் உற்பத்தித்திறனுக்கு மிக முக்கியமானவை என்றும், இந்தியாவின் பொருளாதார லட்சியங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமானால், குழந்தைப் பருவத்திலும், இளமைப் பருவத்திலும் இது குறித்து உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே மனநலப் பிரச்சனைகள் அதிகரிப்பது பெரும்பாலும் இணையத்தின் அதிகப்படியான பயன்பாட்டுடன், குறிப்பாக சமூக ஊடகங்களுடன் தொடர்புடையது என்பதை பொருளாதார ஆய்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

சிறந்த பணியிட கலாச்சாரம் சிறந்த மன நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது. வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் குடும்ப சூழ்நிலைகளும் மன நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன என்றும் அது கூறுகிறது.

அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவை அரிதாகவே உட்கொள்பவர்கள், தொடர்ந்து உட்கொள்பவர்களை விட சிறந்த மன நல்வாழ்வைக் கொண்டுள்ளனர் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. அரிதாக உடற்பயிற்சி செய்பவர்கள், சமூக ஊடகங்களில் தங்கள் ஓய்வு நேரத்தை செலவிடுபவர்கள் அல்லது தங்கள் குடும்பங்களுடன் நெருக்கமாக இல்லாதவர்கள் மோசமான மன நல்வாழ்வைக் கொண்டுள்ளனர் என்று அது கூறுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097865

***

TS/PKV/RR/KR/DL


(Release ID: 2098216) Visitor Counter : 8