இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் நாடுகளின் இளம் கவுன்சில் தொழில்முனைவோர் பணிக்குழு கூட்டத்தை மார்ச் 2025-ல் இந்தியா நடத்துகிறது

प्रविष्टि तिथि: 31 JAN 2025 12:26PM by PIB Chennai

பிரிக்ஸ் நாடுகளின் இளம் கவுன்சில் தொழில்முனைவோர் பணிக்குழு கூட்டம் 2025 மார்ச் 3 முதல் 7 வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஏற்பாடு  செய்துள்ளது. இதில் பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த 45 இளம் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்.

பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே தொழில்முனைவு தளத்தில் இளைஞர்கள் தொடர்பான பணிகள் மற்றும் ஒத்துழைப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இந்தப் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

இந்தப் பணிக்குழு கூட்டத்தின் முன்னோட்டமாக 2025 பிப்ரவரி 4 அன்று ஒடிசாவிலும், பிப்ரவரி 7 அன்று அசாமின் குவஹாத்தியிலும், பிப்ரவரி 11 அன்று கர்நாடகாவின் பெங்களூரூவிலும், முன்னோட்ட நிகழ்வுகள் நடத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக்  காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097834

***

SMB/AG/DL


(रिलीज़ आईडी: 2098214) आगंतुक पटल : 90
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati