நிதி அமைச்சகம்
2014-ம் நிதியாண்டில் 50.6%-மாக இருந்த தொழில் துறையின் மொத்த மதிப்புக் கூட்டு விகிதம் 2025-ம் நிதியாண்டில் 55.3%-மாக உயர சேவை துறையின் பங்களிப்பு முக்கியமானதாகும்: பொருளாதார ஆய்வறிக்கை
Posted On:
31 JAN 2025 1:53PM by PIB Chennai
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2024-25-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை சேவைத் துறையின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளது. சேவைத் துறை உள்நாட்டு மற்றும் உலக அளவிலான வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
2014-ம் நிதியாண்டில் 50.6%-மாக இருந்த தொழில் துறையின் மொத்த மதிப்புக் கூட்டு விகிதம் சேவைத் துறையின் பங்களிப்பு காரணமாக 2025-ம் நிதியாண்டில் 55.3%-மாக உயர்ந்தது உயர்ந்தது. சேவைத் துறையின் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வந்ததாக பொருளாதார ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளது.
2023-ம் நிதியாண்டில் இருந்து 2025-ம் நிதியாண்டு வரையில் சேவைத் துறை 8.3% வளர்ச்சி அடைந்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. 2025-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் சேவைகள் ஏற்றுமதி வளர்ச்சி 12.8% உயர்ந்தது.
திறன் மிகுந்த தொழிலாளர்கள், விதிமுறைகளை எளிதாக்கியது, உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் முன்னேற்றத்திற்கான ஒழுங்கு முறைகள் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு காரணிகளாக அமைந்தது என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உலகளாவிய திறன் மையங்கள் 19 லட்சம் தொழிலியல் நிபுணர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. சராசரி தரவு பயன்பாடு 2021-ம் ஆண்டில் 12.1 ஜிபியாக இருந்த நிலையில், இது 2024-ம் ஆண்டில் 19.3 ஜிபியாக உயர்ந்தது என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097889
***
TS/PKV/RR/KR/DL
(Release ID: 2098189)
Visitor Counter : 11