உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலத்தில் புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆய்வு

Posted On: 30 JAN 2025 4:16PM by PIB Chennai

குஜராத் மாநிலத்தில்  மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் அமல்படுத்துவது  குறித்த ஆய்வுக் கூட்டம்   உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர்  திரு அமித் ஷா தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்றது.  இந்த ஆய்வுக் கூட்டத்தில் குஜராத் மாநில முதலமைச்சர்  திரு பூபேந்திர படேல்  கலந்துகொண்டார். குஜராத்தில் காவல்துறை, சிறைச்சாலை, நீதிமன்றங்கள், வழக்குத் தொடுப்பது, தடயவியல் தொடர்பான பல்வேறு புதிய விதிகளின் அமலாக்கம் குறித்து இக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் உள்துறை இணையமைச்சர், செயலாளர், அம்மாநில தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை  இயக்குநர், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தலைமை இயக்குநர், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில அரசின் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய திரு அமித் ஷா, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் விதிகள், எந்தவொரு வழக்கிலும்  முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதிலிருந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை மூன்று ஆண்டுகளுக்குள் நீதி வழங்கும் வகையில்  உள்ளதாகத் தெரிவித்தார். 

புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் குஜராத் மாநில அரசின் பணிகளைப் பாராட்டிய திரு ஷா, 2025 – ம் ஆண்டு ஏப்ரல் 30 – ம் தேதிக்குள் அனைத்து ஆணையரக அலுவலகங்களிலும் புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதை அம்மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், விரைவில் மாநிலம் முழுவதும் இச்சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  இந்த ஆய்வுக் கூட்டம் அம்மாநில முதலமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர், அம்மாநில தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை), காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோர் நிலையில் மாதம் இருமுறை மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

10 ஆண்டுகளுக்கும் கூடுதலான தண்டனை சம்பந்தப்பட்ட 92 சதவீத வழக்குகளில் சரியான நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் குஜராத் மாநில அரசு பாராட்டத்தக்க வகையில் சாதனை படைத்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். எஞ்சியுள்ள வழக்குகளுக்கு, நீதிமன்றத்தில் அனுமதி பெற சட்டத்தில் உள்ள விதிமுறையைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய மறுஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று திரு அமித் ஷா வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097618

***

 

TS/SV/AG/DL


(Release ID: 2097678) Visitor Counter : 21