இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகில் முன்னேற்றத்திற்கு ஆராய்ச்சியும், புதிய கண்டுபிடிப்புகளும் அவசியம்: டாக்டர் மன்சுக் மாண்டவியா

प्रविष्टि तिथि: 27 JAN 2025 6:34PM by PIB Chennai

முதலாவது சர்வதேச ஒலிம்பிக் ஆராய்ச்சி மாநாட்டை மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கி வைத்தார். 2036 ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் முயற்சியை அதிகரிக்க நிதி நிலைத்தன்மை, திட்டமிடல், கூட்டு கட்டமைப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, உலகளாவிய ஒலிம்பிக் சூழல் அமைப்பில் இந்தியாவை ஒரு குறிப்பிடத்தக்க நாடாக நிலைநிறுத்துவதை இந்த நான்கு நாள் மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டின் மாற்றம் மற்றும் முன்னேற்றத்தை பிரதிபலிக்கின்றன என்று கூறினார். "இந்தியாவின் மாறிவரும் அம்சத்தை இந்தப் பல்கலைக்கழகம் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். நாம் செழிப்பாக வேண்டும், முன்னேற வேண்டும், நமது இலக்குகளை அடைய பாடுபட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இதற்கு ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார். ஆராய்ச்சி அல்லது புதிய யோசனைகளை செயல்படுத்தாமல், எவரும் உலகில் முன்னேற முடியாது என்றும் அவர் கூறினார்.  நாம் தலைமை தாங்க விரும்பினால், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது என்று அவர் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2096767

***

TS/IR/RJ/DL


(रिलीज़ आईडी: 2096803) आगंतुक पटल : 68
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati