இந்திய லோக்பால் அமைப்பு
azadi ka amrit mahotsav

லோக்பால் அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

Posted On: 26 JAN 2025 4:53PM by PIB Chennai

 

76-வது குடியரசு தின விழா லோக்பால் அலுவலகத்தில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

லோக்பால் தலைவர் நீதிபதி திரு ஏ.எம்.கன்வில்கர் மூவர்ணக் கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

லோக்பால் தலைவர் தமது உரையில், சுதந்திரம், நீதி, விட்டுக்கொடுக்காத மன உறுதி ஆகியவற்றின் அடையாளமாக மூவர்ணக் கொடி உயரமாகவும் வலிமையாகவும் பறக்கிறது என்று கூறினார். விவேகம், தொலைநோக்குப் பார்வை, நீதி, அனைவரையும் உள்ளடக்கிய தேசத்திற்கான உத்வேகம் ஆகியவற்றுடன் வடிவமைக்கப்பட்ட நமது அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இந்த கொண்டாட்டம் நமது கூட்டு எதிர்பார்ப்புகளின் கலங்கரை விளக்கம் என்றும், ஜனநாயகம், சமத்துவம், நீதி ஆகியவை மீதான நமது அசைக்க முடியாத நம்பிக்கைக்கு ஒரு சான்று என்றும் அவர் மேலும் கூறினார்.

மக்கள் நேர்மையுடனும், பொறுப்புடனும், தைரியத்துடனும் செயல்படுவதுடன், நமது குடியரசு வலிமையானது என்பதை இந்த முக்கியத்துவம் வாய்ந்த நாளில் அனைவரும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். ஊழல், எந்த வடிவத்தில் இருந்தாலும், அது வெறும் சட்ட துரோகம் மட்டுமல்ல என்றும், அது நம்பிக்கை துரோகம் எனவும் அவர் கூறினார். இந்தியாவின் லோக்பால் என்பது வெறும் அமைப்பு மட்டுமல்லாமல் அது நியாயத்தையும் வெளிப்படைத்தன்மையையும் நிலைநிறுத்துவதற்கான அமைப்பு என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என அவர் கூறினார். ஊழலுக்கு எதிரான இந்த இயக்கத்தில் ஒவ்வொருவரும் கைகோர்க்க வேண்டும் என்று அவர்  வலியுறுத்தினார்.

இந்த குடியரசு தினம் நம்மில் ஒரு புதிய நோக்கம், ஒற்றுமை, நம்பிக்கையைத் தூண்டட்டும் என்று திரு கன்வில்கர் கூறினார்.

***

PLM/KV

 


(Release ID: 2096463) Visitor Counter : 38


Read this release in: English , Urdu , Hindi , Marathi