தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஐஐஎம்சியில் கதை சொல்லல் பயிலரங்கு
Posted On:
23 JAN 2025 7:49PM by PIB Chennai
வேவ்ஸ் (WAVES) – 2025-ன் கீழ் கிரியேட் இன் இந்தியா சவால்-I ன் ஒரு பகுதியாக அனிமேஷன் தயாரிப்பாளர் போட்டியை நடத்துகின்ற டேன்சிங் ஆட்டம்ஸ் என்ற அமைப்பு 2025 ஜனவரி 23 அன்று புது தில்லியில் உள்ள இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தில் (IIMC-ஐஐஎம்சி) கதை சொல்லல் பயிலரங்கை நடத்தியது. பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான சரஸ்வதி புயாலா இந்த அமர்வுக்கு தலைமை வகித்தார். இது ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.
பிரதமர் நரேந்திர மோடி தமது 114 வது மனதின் குரல் உரையில், வளர்ந்து வரும் கேமிங், அனிமேஷன் மற்றும் திரைப்படத் தயாரிப்பு போன்ற படைப்புத் துறைகளில் அதிகரித்து வரும் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்திருந்தார். தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள 'இந்தியாவில் உருவாக்குதல்' சவால்களில் பங்கேற்குமாறு படைப்பாளிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன் அடிப்படையில் இந்தப் பயிலரங்கு, பங்கேற்பாளர்களுக்கு அழுத்தமான கதைகளை வடிவமைப்பது மற்றும் திரைக்கதையில் தேர்ச்சி பெறுவது குறித்த செயல் நுண்ணறிவுகளை வழங்கியது.
***
(Release ID: 2095585)
TS/PLM/AG/KR
(Release ID: 2095797)
Visitor Counter : 39