கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி அனைவரும் இணைந்து பணியாற்றுவதே நேதாஜிக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்: பிரதமர் திரு நரேந்திர மோடி

இடுகை இடப்பட்ட நாள்: 23 JAN 2025 9:38PM by PIB Chennai

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 128-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள பாராபதி கோட்டையில் 2025 ஜனவரி 23 அன்று பராக்ரம தின கொண்டாட்டம் நடைபெற்றது. நேதாஜியின் பிறந்த இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி, நேதாஜியுடனான ஒடிசாவின் தொடர்பையும், நேதாஜியின் ஆரம்பகால உணர்வுகளை வளர்ப்பதில் மாநிலத்தின் தாக்கத்தையும் நினைவு கூர்ந்தது. நேதாஜி, தேசியவாத நோக்கத்தில் கொண்டிருந்த அயராத அர்ப்பணிப்பு உணர்வை எடுத்துரைக்கும் வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

நேதாஜியின் எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணத்தை நினைவு கூர்ந்த பிரதமர், ஒடிசாவுடன் நேதாஜியின் ஆரம்பகால தொடர்பையும் எடுத்துரைத்தார். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற லட்சியத்திற்காக தேசம் ஒன்றுபட வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். இதுவே நேதாஜிக்கு உண்மையான அஞ்சலியாக அமையும் என்றும் அவர் கூறினார்.

***

(Release ID: 2095640)

TS/PLM/AG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2095784) வருகையாளர் எண்ணிக்கை : 58
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi