குடியரசுத் தலைவர் செயலகம்
இந்திய பாதுகாப்புக் கணக்குப் பணி மற்றும் இந்திய தொலைத் தொடர்புப் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
Posted On:
22 JAN 2025 1:49PM by PIB Chennai
இந்திய பாதுகாப்பு கணக்குப் பணி மற்றும் இந்திய தொலைத்தொடர்புப் பணி பயிற்சி அதிகாரிகள் குழு இன்று (2025 ஜனவரி 22) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தது.
பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் வேகமடைந்துள்ள சூழலில் இந்த அதிகாரிகள் பணியில் இணைவதாகக் கூறினார். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு, விரைவான தகவல் பரவல், மாறும் உலகளாவிய சூழல்கள் ஆகியவற்றை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவின் உள்ளடக்கிய வளர்ச்சியிலும், அதை உலக அளவில் போட்டித்திறன் மிக்கதாக மாற்றுவதிலும் அதிகாரிகளின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று அவர் கூறினார். தங்கள் கடமைகளைச் செய்யும்போது மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை எப்போதும் பின்பற்றவும் அவர் அறிவுறுத்தினார். அதிகாரிகள் முடிவுகளை எடுக்கும்போது சமூகத்தின் பின்தங்கிய பிரிவினரின் தேவைகள், விருப்பங்களை மனதில் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு கேட்டுக்கொண்டார்.
இந்திய பாதுகாப்புக் கணக்கு சேவை அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், நமது நாட்டின் ஆயுதப் படைகளின் நிதி அம்சங்களை மேற்பார்வையிடுவதில் இந்த அதிகாரிகள் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.
இந்திய தொலைத்தொடர்பு பணி அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், கடந்த 20 ஆண்டுகளாக மொபைல் தொலைபேசி, அதிவேக இணையதள கட்டமைப்புகளின் முன்னேற்றத்தால் தொலைத்தொடர்பு கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2095244)
Visitor Counter : 23